தோனி தான் அதை எனக்கு கற்றுக் கொடுத்தார்: இலங்கை பந்துவீச்சாளர் மதிசா பதிரானா நெகிழ்ச்சி
தோனி தான் அழுத்தம் நிறைந்த டி20 கிரிக்கெட் போட்டியில் எப்படி விளையாட வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்ததாக இலங்கை பந்துவீச்சாளர் மதிசா பதிரானா பேசியுள்ளார்.
தோனியின் பாராட்டை பெற்ற பதிரானா
2023ம் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இளம் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதிசா பதிரானா.
இலங்கையின் முன்னாள் ஜாம்பவான் லசித் மலிங்காவின் ஸ்லிங்கா ஆக்சனை அப்படியே பிரதிபலிக்கும் இவர் கடந்த ஐபிஎல் சீசனில் சென்னை அணிக்காக 12 போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுகளையும் 8.01 என்ற நல்ல எக்கனாமியையும் வைத்து இருந்தார்.
அத்துடன் டெத் ஓவர்களில் மலிங்காவை போலவே மிகவும் துல்லியமான யார்கர்களை வீசி எதிரணிகளை திணறடித்தார்.
இது போன்ற பல காரணங்களால், சென்னை அணியின் கேப்டன் தோனி நிறைய செய்தியாளர்கள் சந்திப்பில் அவரை புகழ்ந்து தள்ளினார்.
பதிரானா நெகிழ்ச்சி
இந்நிலையில் மிகப்பெரிய அனுபவம் இல்லாத வீரராக இருந்த எனக்கு ஐபிஎல் மூலம் அழுத்தமான டி20 கிரிக்கெட் போட்டியில் எப்படி விளையாட வேண்டும் என்பதை தோனி தான் கற்றுக் கொடுத்ததாக இலங்கை பந்துவீச்சாளர் மதிசா பதிரானா வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசியுள்ள பதிரனா, தோனிடம் இருந்து நிறைய விஷயங்கள் நான் கற்றுக் கொண்டேன். முதலில் அவரது அமைதி, அதனால் அவரால் வெற்றிகரமாக இருக்கிறார். அதைப்போல் அவரது பிட்னஸ், 42 வயதிலும் அவர் பீட்னஸுடன் இருந்து இளம் வீரர்கள் அனைவரைக்கும் உத்வேகம் கொடுக்கிறார்.
சென்னை அணியில் நான் குழந்தையாக இருந்தேன், எனக்கு அவர்கள் நிறைய பயிற்சி கொடுத்தனர், நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்தனர்.
இதனால் என்னால் தற்போது எத்தகைய டி20 கிரிக்கெட் போட்டிகளிலும் என்னுடைய 4 ஓவர்களை சிறப்பாக வீச முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் நான் காயங்கள் அடையாமல் இருந்தால், இலங்கை அணிக்கு நிறைய வெற்றிகளை என்னால் பெற்றுத் தர முடியும் என தோனி அறிவுரை வழங்கினார் என்றும் மதிசா பதிரானா தெரிவித்துள்ளார்.
matheesha pathirana, MS Dhoni , CSK
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |