சிஎஸ்கே அணியில் களமிறங்கும் இலங்கையின் இளம் சிங்கம்! மலிங்காவின் நகல் என ரசிகர்கள் உற்சாகம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முக்கிய வீரருக்கு மாற்றாக இலங்கையின் இளம்சிங்கம் மதீஷா பதிரானா சேர்க்கப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடரின்
இன்றைய போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. சென்னை அணியின் முக்கிய பந்துவீச்சாளர் ஆடம் மில்னே காயத்தால் வெளியேறியுள்ளார்.
இதையடுத்து அவருக்கு மாற்று வீரராக இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் மதீஷா பதிரனா சேர்க்கப்பட்டுள்ளார். 19 வயதே ஆகும், இவர் U 19 உலகக்கோப்பை தொடரில் மிரட்டினார்.
Imagine how long this action would have lasted in the more regimented world of cricket coaching in this country ... 17-year-old Matheesha Pathirana on his way to 6 for 7 on his debut for @TrinityColKandy in Sri Lanka ... pic.twitter.com/VO4gBPtmY0
— Martin Williamson (@mogodonman) September 27, 2019
4 போட்டிகளில் 7 விக்கெட்களை சாய்த்தார். மதீஷா பதிரானா மலிங்காவை போன்ற ஸ்டைலில் பந்துவீசக்கூடியவர்.
சென்னை அணியில் ஏற்கனவே மஹீஷ் தீக்ஷணா பவுலிங்கில் கலக்கி வருகிறார்.
இந்நிலையில் 2வதாக ஒரு இலங்கை வீரர் சேர்க்கப்பட்டிருப்பது அந்த அணிக்கு திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Welcome Matheesha Pathirana, the Young pace ?into the SuperFam?#Yellove #WhistlePodu ? pic.twitter.com/C7FURylQeS
— Chennai Super Kings (@ChennaiIPL) April 21, 2022