முதல் ஐபிஎல் போட்டியிலேயே மிரட்டிய ஜூனியர் மலிங்கா! 19 வயது இலங்கை வீரரை பாராட்டிய ஜாம்பவான்
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய இலங்கையை சேர்ந்த மதீஷா பதிரனாவுக்கு, ராஜஸ்தான் பயிற்சியாளரும், இலங்கை ஜாம்பவானுமான லசித் மலிங்கா பாராட்டியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் லெஜெண்ட்ஸ் அணியிடம் படுதோல்வியடைந்தது. நேற்றைய போட்டியில் இலங்கையைச் சேர்ந்த 19 வயது வேகப்பந்து வீச்சாளரான மதீஷா பதிரனா சென்னை அணியில் களமிறங்கினார்.
முதல் தர போட்டிகளில் மலிங்காவின் ஸ்டைலில் பந்துவீசி அசத்தியதால், ஜூனியர் மலிங்கா என்று அழைக்கப்படும் மதீஷா பதிரனா தனது முதல் ஐபிஎல் போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 3 ஓவர்கள் வீசிய அவர் 24 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்தார்.
இந்த நிலையில் இலங்கையின் முன்னாள் பந்துவீச்சாளர் லசித் மலிங்கா அவருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'சிறப்பான தொடக்கம் இளைஞரே. மதீஷா உங்களின் Full & Straight பந்துவீச்சு சிறப்பு' என தெரிவித்துள்ளார்.
Excellent start young man @matheesha_99 ?
— Lasith Malinga (@ninety9sl) May 15, 2022
FULL & STRAIGHT??#IPL2022