முதல் முறையாக உலக சாம்பியனாகும் நாடு- ஜேர்மன் கணிதவியலாளர் கணிப்பு
2026 FIFA உலகக்கோப்பை சாம்பியன் யார் என்பதை பிரபல ஜேர்மன் கணிதவியலாளர் கணித்துளார்.
ஜேர்மன் கணிதவியலாளர் ஜோயாகிம் கிளெமென்ட் (Joachim Klement), கடந்த மூன்று FIFA உலகக் கோப்பை வெற்றியாளர்களை (ஜேர்மனி-2014, பிரான்ஸ் - 2018, அர்ஜென்டினா - 2022) சரியாக கணித்தவர்.
இந்திய விமானப் போக்குவரத்தில் புதிய சாதனை: GAGAN செயற்கைக்கோள் வழிகாட்டுதலுடன் Indigo விமானம் தரையிறக்கம்
இம்முறை 2026 உலகக் கோப்பையில் நெதர்லாந்து வெற்றி பெறும் என தனது மாதிரியின் அடிப்படையில் கணித்துள்ளார்.
கிளெமென்ட், FIFA தரவரிசை, GDP per capita, மக்கள் தொகை, காலநிலை போன்ற காரணிகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு புள்ளியியல் மாதிரியை உருவாக்கியுள்ளார். இந்த மாதிரி, 55 சதவீத முடிவுகளை விளக்குகிறது. மீதமுள்ள 45 சதவீதம் அதிர்ஷ்டம் என அவர் கூறுகிறார்.

அவரது கணிப்பின்படி, அரைஇறுதியில் ஸ்பெயின் vs நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து vs அர்ஜென்டினா மோதும். இறுதியில், நெதர்லாந்து ஸ்பெயினை வென்று, போர்ச்சுகல் இங்கிலாந்தை வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
இறுதியில், நெதர்லாந்து போர்ச்சுகலை வீழ்த்தி முதல் முறையாக உலக சாம்பியன் ஆகும் என அவர் கூறுகிறார்.

கிளெமென்ட், தனது மாதிரி வெறும் விளையாட்டுப் பொழுதுபோக்கு மட்டுமே என்றும், அதனை கிளப் போட்டிகள் அல்லது கண்டம் அளவிலான போட்டிகளுக்கு பயன்படுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
அவர், “ஒவ்வொரு போட்டியிலும் அதிர்ஷ்டம் மிகப் பெரிய பங்கு வகிக்கிறது. எனவே, இந்த மாதிரி 100 சதவீதம் சரியாக இருக்கும் என கூறமுடியாது” என தெரிவித்துள்ளார்.
இந்த கணிப்பு, உலகக் கோப்பை ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, நெதர்லாந்து இதுவரை உலகக் கோப்பை வெல்லாத நாடு என்பதால், இந்த கணிப்பு அவர்களின் ரசிகர்களுக்கு பெரும் நம்பிக்கையை அளிக்கிறது.
இந்திய விமானப் போக்குவரத்தில் புதிய சாதனை: GAGAN செயற்கைக்கோள் வழிகாட்டுதலுடன் Indigo விமானம் தரையிறக்கம்
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |