230 ஓட்டங்கள் இலக்கை விரட்டி பிடித்த அணி! டி20 போட்டியில் சரவெடியாய் வெடித்த வீரர்
பிக் பாஷ் லீக் தொடரில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் அணியை வீழ்த்தியது.
மூன்று வீரர்கள் அரைசதம்
அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடந்த போட்டியில், முதலில் ஆடிய ஹோபர்ட் அணி 4 விக்கெட் இழப்புக்கு 229 ஓட்டங்கள் குவித்தது.
தொடக்க வீரர்கள் பென் மெக்டெர்மோட் 57 (30) ஓட்டங்களும், ஜெவெல் 54 (25) ஓட்டங்களும் விளாசினர். ஜக் கிரேவ்லே 54 (28) ஓட்டங்களும், டிம் டேவிட் 39 (20) ஓட்டங்களும் எடுத்தனர். அடிலெய்டு தரப்பில் கிராண்ட்ஹோம் 2 விக்கெட்களையும், ஷார்ட் மற்றும் கான்வே தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
மேத்யூ ஷார்ட் மிரட்டல்
பின்னர் களமிறங்கிய அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியில் கேப்டன் மேத்யூ ஷார்ட் அதிரடியில் மிரட்டினார். அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்த கிறிஸ் லின் சிக்ஸர்களை பறக்கவிட்டார்.
இவர்களின் கூட்டணியால் அடிலெய்டு அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. அரைசதம் கடந்த லின் 29 பந்துகளில் 64 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஆடம் ஹோஸ் வாணவேடிக்கை காட்டினார்.
Pandemonium at the Adelaide Oval!
— KFC Big Bash League (@BBL) January 5, 2023
Unforgettable knock from Matt Short #BBL12 pic.twitter.com/s6Lcgc7qt9
வெற்றிக் கூட்டணி
ஹோஸ் - ஷார்ட் கூட்டணி 7 ஓவர்களில் 73 ஓட்டங்கள் குவித்தது. மேத்யூ ஷார்ட் ஆட்டமிழக்காமல் சதம் விளாசி அணியை வெற்றி பெற வைத்தார். அவர் 59 பந்துகளில் 3 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 100 ஓட்டங்கள் விளாசி களத்தில் இருந்தார்.
அடிலெய்டு அணி 19.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 230 ஓட்டங்கள் எடுத்தது. ஹோஸ் 38 (22) ஓட்டங்கள் எடுத்தார்.