நங்கூரமாக நின்ற ஏஞ்சலோ மேத்யூஸ்.. அசத்தல் சதம்!
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்டில் இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் சதம் அடித்துள்ளார்.
வங்கதேச அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி விளையாடி வருகிறது. டாக்காவில் நடந்து இந்தப் போட்டியின் 4வது நாள் ஆட்டத்தில் இலங்கை அணி பேட்டிங் செய்து வருகிறது.
முதல் டெஸ்ட் போட்டியில் 199 ஓட்டங்கள் விளாசிய இலங்கை வீரர் மேத்யூஸ், இந்த டெஸ்டில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
நங்கூரம் போல் நிலைத்து நின்று ஆடிய அவர் தனது 13வது டெஸ்ட் சதத்தை அடித்துள்ளார். இதில் 2 சிக்ஸர், 7 பவுண்டரிகள் அடங்கும்.
Photo Credit: AFP/Munir uz ZAMAN
மேத்யூசுடன் பார்ட்னெர்ஷிப் அமைத்த சண்டிமல் அரைசதம் அடித்துள்ளார். இவர்களது பார்ட்னெர்ஷிப் மூலம் இலங்கை அணி 400 ஓட்டங்களை கடந்துள்ளது.