சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் இலங்கை நட்சத்திர வீரர்? கசிந்த தகவல்
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து ஆலோசித்து வருவதாக இலங்கை கிரிக்கெட் வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் இலங்கை கிரிக்கெட்டிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது சர்வதே கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது விவாதித்து வருவதாகவும், எதிர்வரும் வாரங்களில் தனது முடிவை தெரிவிப்பதாகவும் 34 வயதான மேத்யூஸ் இலங்கை கிரிக்கெட்டிடம் தெரிவித்துள்ளார் என்று SLC வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒரு நாள் மற்றும் டி-20 தொடர்களை இளம் வீரர்களை வைத்து விளையாட தேர்வாளர்கள் முடிவு செய்ததால், மூத்த வீரர்களில் ஒருவரான மேத்யூஸ் அணியில் சேர்ப்பது குறித்து பரீசிலிக்க படவில்லை.
ஒருநாள் போட்டிகளில் மேத்யூஸை கைவிடுவது சர்ச்சைக்குரியது என பலர் கருதுகின்றனர்.
மேத்யூஸின் பீல்டிங் மற்றும் உடற்தகுதி 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்திலும் கணிசமாக முன்னேறியுள்ளன.
அதேசமயம், புதிய மத்திய ஒப்பந்த புள்ளிகள் முறை தொடர்பாக மேத்யூஸ் மற்றும் பல மூத்த கிரிக்கெட் வீரர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர்.
பின்னர் மூத்த வீரர்கள் மேத்யூஸுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட ஒப்புக் கொண்டனர், ஆனால் இலங்கை கிரிக்கெட் அவர்களுக்கு இப்போது சுற்றுப்பயண ஒப்பந்தங்கள் மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.