சுரேஷ் ரெய்னாவுக்கு வாழ்த்து தெரிவித்து இலங்கை அணி நட்சத்திர வீரர் வெளியிட்ட புகைப்படம்
இந்திய அணியை சேர்ந்த சுரேஷ் ரெய்னா பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து இலங்கை நட்சத்திர வீரர் மேத்யூஸ் வெளியிட்ட புகைப்படம் வைரலாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தனது சிறப்பான பங்களிப்பை கொடுத்தவர் சுரேஷ் ரெய்னா.
இன்று ரெய்னாவுக்கு பிறந்தநாள் ஆகும். இதையடுத்து பல கிரிக்கெட் வீரர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
A very happy birthday bro @ImRaina have a great year ahead ! ?? stay blessed pic.twitter.com/AcqHYur9vc
— Angelo Mathews (@Angelo69Mathews) November 27, 2021
அந்த வகையில் இலங்கை அணியின் நட்சத்திர வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ், பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரர் ரெய்னா என பதிவிட்டுள்ளார்.
இதோடு முன்னர் நடைபெற்ற ஒரு போட்டியின் போது களத்தில் ரெய்னா தனக்கு உதவும் புகைப்படத்தையும் மேத்யூஸ் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.