சூடான சாதத்திற்கு சூப்பரான மத்தி மீன் வறுவல்! இந்த படிமுறை செய்தால் போதுமாம்
பெரும்பாலனவர்கள் மாமிச உணவு இல்லாமல் உண்ண மாட்டார்கள், அதிலும் மீன் மற்றும் இறைச்சி இல்லாம் உண்பது இல்லை.
கேரளாவில் ஸ்பேஷலான மத்தி மீன் வறுவல் எப்படி வீட்டிலேயே இலகுவாக செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருள்கள்
- மத்தி மீன் - 1 /2 கிலோ
- மிளகு - 10 தேக்கரண்டி
- சீரகம் - 1 தேக்கரண்டி
- சோம்பு - 1 /2 தேக்கரண்டி
- இஞ்சி - 2 இன்ச் நீளம்
- பூண்டு - 20 பல்
- எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
-
தயிர் -1 /2 தேக்கரண்டி
-
உப்பு- தேவையான அளவு
- எண்ணெய் -200 மில்லி
- கறிவேப்பிலை
செய்முறை
முதலில் மீனை நன்றாக சுத்தம் செய்து, அதில் மிளகு, சீரகம், சோம்பு சேர்து வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இஞ்சி, பூண்டையும் நன்கு அரைக்கவும். பின் ஒரு பாத்திரத்தில் இஞ்சி,பூண்டு விழுது, மிளகு, சீரகம், எலுமிச்சை சாறு, தயிர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து, அதை மீனில் தடவிக்கொள்ள வேண்டும்.
இதனை குளிர்சாதன பெட்டியில் குறைந்தது ஒரு மணி நேரம் வைக்கவும்.
அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, மீனை மெதுவாக அடுக்கி வைத்து பொறித்து எடுக்கவும்.
மீனை உடையாமல் புரட்டவும். இறுதியாக ஒரு தட்டில் வைத்து கறிவேப்பிலை வைத்து அலங்கரித்து பரிமாறலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |