திருமண கடன் வழங்கும் தளத்தை அறிமுகப்படுத்திய மேட்ரிமோனி
திருமண கடன் வழங்கும் ஃபின்டெக் தளத்தை (financial technology) மேட்ரிமோனி.காம் (Matrimony) அறிமுகம் செய்துள்ளது.
Matrimony Wedding Loan
திருமணத்திற்கான வாழ்க்கைத் துணையை கண்டுபிடிப்பது தொடர்பான சேவைகளை மேட்ரிமோனி.காம் நிறுவனம் வழங்கி வருகிறது.
இந்நிறுவனமானது, திருமணத்திற்கான கடன்களை வழங்குவதற்காக அதன் நிதி தொழில்நுட்ப தளமான ‘Wedding Loan.com’ என்னும் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
Matrimony.com வெளியிட்ட அறிக்கையில் கூறியது, "இந்த தளம் கடன்களை விற்பனை செய்வதைத் தாண்டி வாடிக்கையாளர்கள் தங்கள் நிதி நலனில் சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம் சரியான முடிவை எடுக்க உதவும்.
IDFC, Tata Capital, Larsen & Toubro Finance போன்ற முன்னணி நிதி நிறுவனங்களுடன் இணைந்து ‘வெட்டிங் லோன்’ முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளது.
இதுகுறித்து நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி முருகவேல் ஜானகிராமன் கூறுகையில், "கடந்த 20 ஆண்டுகளாக மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு மேட்ரிமோனியே காரணம்.
சரியான வாழ்க்கைத் துணையைக் கண்டுபிடிக்க விரும்பும் மில்லியன் கணக்கான மக்களுக்கு நாங்கள் நம்பகமான இருக்கிறோம்.
WeddingLoans.com மூலம், திருமணத்தைத் திட்டமிடுதல், வரவு செலவுத் திட்டம் மற்றும் நடைமுறைப்படுத்துதல் போன்ற செயல்முறைகளை எளிதாக்க எங்கள் சேவைகளை விரிவுபடுத்த உள்ளோம்" என்றார்.
கடன், வட்டி விகிதம், திரும்ப செலுத்தும் காலம் போன்ற விவரங்களை வாடிக்கையாளர்கள் வெட்டிங் லோன் ஆலோசகர்களிடமிருந்து கேட்டு பெறலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |