உதவியாளர் பெண்ணுடன் நெருக்கம்... வெளியான படங்கள்: ஒப்புக்கொண்ட பிரித்தானியா சுகாதார செயலாளர்!
உதவியாளருடன் நெருக்கமாக இருக்கும் படங்கள் வெளியானதை தொடர்ந்து, வெளிப்படையாக தான் செய்த தவறை பிரித்தானியா சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் ஒப்புக்கொண்டுள்ளார்.
பிரித்தானியா சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தனது உயர்மட்ட உதவியாளருடன் கள்ளத் தொடர்பு வைத்திருப்பதை The Sun அம்பலப்படுத்தியது.
அலுவலகத்தில் மாட் ஹான்காக் உயர்மட்ட உதவியாளர் Gina Coladangelo உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை The Sun வெளியிட்டது.
இதனையடுத்து, மாட் ஹான்காக் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்கட்சியினர் வலியுறுத்தினர்.
இந்நிலையில் இது தொடர்பில் மாட் ஹான்காக் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் தனது மனைவியிடம் மன்னிப்பு கேட்கவோ அல்லது அவரது நடத்தையை ஒப்புக் கொள்ளவோ இல்லை.
மாறாக, நான் சமூக இடைவெளி விதிகளை மீறினேன் என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.
மக்கள் எதிர்பார்த்ததை செய்யத் தவறியதன் மூலம் நான் அவர்களை ஏமாற்றிவிட்டேன், அதற்காக மிகவும் வருந்துகிறேன்.
கொரோனா தொற்றுநோயிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான பணியில் நான் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறேன் என மாட் ஹான்காக் தனது அறிக்கைியல் குறிப்பிட்டுள்ளார்.