திருமணமான பெண்ணுடன் முத்தக்காட்சியில் சிக்கிய பிரித்தானிய முன்னாள் சுகாதார செயலருக்கு அளிக்கப்பட்டுள்ள பெரும் கௌரவம்
திருமணமான பெண் ஒருவருடன் திருட்டுத்தனமாக முத்தமிட்டுக்கொள்ளும்போது கமெராவில் சிக்கிய காட்சியால் பதவியிழந்த பிரித்தானிய முன்னாள் சுகாதாரச் செயலருக்கு மிகப்பெரிய கௌரவம் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய சுகாதாரச் செயலரான Matt Hancock (42)ம், திருமணமாகி மூன்று பிள்ளைகளுக்குத் தாயாகிய அவரது அவரது உதவியாளரான Gina Coladangelo (43)ம், அலுவலகத்தில் திருட்டுத்தனமாக முத்தமிட்டுக்கொள்ளும் காட்சி ஒன்று வெளியாகி, பிரித்தானிய நாடாளுமன்றத்தையே கலகலக்கச் செய்தது நினைவிருக்கலாம்.
அந்த காட்சிகள் இருவரது திருமணங்களையும் முடிவுக்கு கொண்டு வந்ததுடன், சுகாதாரச் செயலர் தன் பதவியையும் இழக்க காரணமாக அமைந்தன. ஆனால், தத்தம் துணைகளைப் பிரிந்த இருவரும் அதற்குப் பின் சேர்ந்து வாழத்தொடங்கினார்கள்.
இந்நிலையில், Hancockக்கு நேற்றிரவு ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதாரம் மற்றும் சீதோஷ்ணம் தொடர்பிலான சிறப்புப் பிரதிநிதி என்னும் பெரும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
Hancockஇன் புதிய பொறுப்புக்களில் ஒன்று, கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்க நாடுகள் எவ்வாறு தங்கள் பொருளாதார பாதிப்புகளிலிருந்து மீண்டு வருவது என்பது குறித்து ஆலோசனை வழங்குவதாகும்.
இந்த பொறுப்பு Hancockக்கு கிடைக்க காரணமாக இருந்தவர் Nimko Ali என்ற பெண் என தெரியவந்துள்ளது. Nimko, பெண்ணுறுப்புச் சிதைப்புக்கெதிராக பிரச்சாரம் செய்யும் ஒரு சமூக ஆர்வலரும், பிரதமர் போரிஸ் ஜான்சனின் மனைவியான கேரியின் தோழியும் ஆவார்.
Mr Hancock, நாடாளுமன்ற உறுப்பினராவதற்கு முன், இங்கிலாந்து வங்கியின் பொருளாதார நிபுணராக இருந்தவர். ஆகவேதான் அவருக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என ஆப்பிரிக்காவுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.