முத்தக்காட்சிக்குப் பின் மாயமான பிரித்தானிய சுகாதாரச் செயலர்... மனைவி செய்த செயல்: வெளியாகியுள்ள புகைப்படங்கள்
பிரித்தானிய சுகாதாரச் செயலரும், திருமணமாகி மூன்று பிள்ளைகளுக்குத் தாயாகிய அவரது உதவியாளரும் திருட்டுத்தனமாக முத்தமிட்டுக்கொள்ளும் காட்சி ஒன்று வெளியாகி, பிரித்தானிய நாடாளுமன்றத்தையே கலகலக்கச் செய்தது நினைவிருக்கலாம்.
பிரித்தானிய சுகாதாரச் செயலரான Matt Hancock (42)ம், அவரது உதவியாளரான Gina Coladangelo (43)ம், அலுவலகத்தில் முத்தமிட்டுக்கொள்ளும் காட்சிகள் வெளியானதைத் தொடர்ந்து, இருவரும் தலைமறைவானார்கள்.
இந்நிலையில், Matt Hancockக்கு சொந்தமான மிச்சம் மீதி பொருட்களையும் அவருடைய மனைவி, வீட்டு வாசலில் வைத்து அவரிடம் கொடுத்து அனுப்பும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
இத்தனை ஆண்டுகளாக தான் வாழ்ந்த வீட்டுக்கு வந்த Matt Hancockஐ அவரது மனைவி வீட்டுக்குள் விடவில்லை என்றும், அவரது துணிகளை குப்பை போடும் பிளாஸ்டிக் கவர் ஒன்றில் போட்டு, அதையும் அத்துடன் சில பெட்டிகள், சூட்கேஸ்கள் ஆகியவற்றையும் வீட்டு வாசலில் வைத்தே அவர் கொடுத்து அனுப்பிவிட்டதாகவும், அக்கம் பக்கத்தில் வசிப்போர் தெரிவித்துள்ளார்கள்.