பெண் உதவியாளருடன் நெருக்கமாக இருந்த வீடியோ! அதிகரித்த அழுத்தம்: பிரித்தானியா சுகாதார செயலாளர் எடுத்த அதிரடி முடிவு
பிரித்தானியா சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தனது உதவியாளருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அவர் தனது பதவியை ராஜினிமா செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் தீவிரமாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில், கடந்த சில நாட்களாக சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தொடர்பான செய்தி தான் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.
Matt Hancock தனது உயர்மட்ட பெண் உதவியாளரான Gina Coladangelo-உடன் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகின.
இந்த கொரோனா காலகட்டத்தில், ஒரு சுகாதார செயலாளராக Matt Hancock மக்களிடம் சமூக இடைவெளி விடுங்கள், யாரும் யாரையும் கட்டியணைக்காதீர்கள் என்று அறிவுறுத்திய இவரே இப்படி, தனது உதவியாளரான, திருமணமான ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கிறாரா? இவரை என்ன செய்யலாம் என்று இணைத்தில் பொது மக்கள் கிழித்துத் தொங்க விட்டு வருகிறார்கள்.
அரசியல்வாதிகள் அவர் பதவி விலகவேண்டும் என்றும், அவரை பதவியிலிருந்து நீக்கவேண்டும் என்றும் பிரதமருக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்பட்டது.
இந்நிலையில், Matt Hancock சற்று முன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு மாநில செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதம் இது.
கொரோனா, தொற்றுநோயை எதிர்த்துப் போராட ஒரு நாடாக நாங்கள் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறோம். இந்த நெருக்கடியான சூழ்நிலையில், என்னுடைய வாழ்க்கை சம்பந்தமான செய்திகள் அதை திசை திருப்புவதாக கருதுகிறேன்.
"Those of us who make these rules have got to stick by them, and that's why I've got to resign"
— BBC Breaking News (@BBCBreaking) June 26, 2021
In a video, posted on his Twitter account, the Health Secretary Matt Hancock says he has "been to see the prime minister to resign"https://t.co/4Q7bIQGShc pic.twitter.com/Gys3iwmoiU
வழிகாட்டுதலை மீறியதற்காக நான் மீண்டும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.
மேலும் எனது குடும்பத்தினரிடமும் அன்பானவர்களிடமும் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன். இந்த நேரத்தில் நான் எனது குழந்தைகளுடன் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பிரதமர் போரிஸ் நேற்று அவரை சுகாதார செயலாளர் பதவியில் இருந்து நீக்க மறுத்த நிலையில், மாட் ஹான்ஹாக்கின் ராஜினாமா முடிவு வந்துள்ளது நினைவுகூரத்தககது.