உதவியாளருடன் தொடர்பு வைத்திருக்கும் பிரித்தானியா சுகாதார செயலாளர் மாட் ஹான்காக்! அம்பலப்படுத்திய அதிர வைக்கும் புகைப்படங்கள்
பிரித்தானியா சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தனது உயர்மட்ட உதவியாளருடன் கள்ளத் தொடர்பு வைத்திருப்பதை The Sun அம்பலப்படுத்தியுள்ளது.
அலுவலகத்தில் மாட் ஹான்காக் உயர்மட்ட உதவியாளர் Gina Coladangelo உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை The Sun வெளியிட்டுள்ளது.
42 வயதான மாட் ஹான்காக் கடந்த ஆண்டு கொரோனா பிடியில் பிரித்தானியா தவித்துக்கொண்டிருந்த போது Gina Coladangelo-வை தனது உயர்மட்ட உதவியாளராக பணியமர்த்தினார்.
இந்நிலையில், கடந்த மாதம் லண்டனில் உள்ள சுகாதார துறையின் தலைமையகத்தில் இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
மாட் ஹான்காக் மக்கள் வரிபணத்தில் Gina Coladangelo-வை உதவியாளராக பணியமர்த்தி அவருடன் கள்ளத் தொடர்பு வைத்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக அரசியல் விமர்சர்கள் தெரிவித்துள்ளனர்.
3 குழந்தைகளுக்கு தாயான கோடீஸ்வரி Gina Coladangelo (வயது 43), அவரது கணவர் Oliver Tress தொடங்கிய Oliver Bonas என்ற கடையின் தகவல் தொடர்பு இயக்குநராக உள்ளார்.
15 ஆண்டுகளாக மனைவி Martha Hoyer Millar உடன் வாழ்ந்து வரும் மாட் ஹான்காக், அவரை ஏமாற்றி Gina Coladangelo உடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனினும், இக்குற்றச்சாட்டு தொடர்பில் தற்போது வரை இரு தரப்பிலிருந்தும் எந்தவித விளக்கமும் அளிக்கப்படவில்லை.