உதவியாளருடன் நெருக்கமாக இருந்து சிக்கிய பிரித்தானிய சுகாதார செயலாளர்! வெளியான மற்றொரு தகவல்
பிரித்தானிய சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தனது உதவியாளருடன் நெருக்கமாக இருக்கும் பரபரப்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
மாட் ஹான்காக் தனது உயர்மட்ட உதவியாளர் Gina Coladangelo-உடன் கள்ளத் தொடர்பு வைத்திருப்பதை அம்பலப்படுத்திய The Sun, தற்போது அதன் வீடியோ காட்சிகளையும் வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோவில், மாட் ஹான்காக் தனது அறையின் கதவை மெல்ல திறந்து, யாரும் வருகிறார்களா என நோட்டமிடுகிறார். யாரும் இல்லை என்பதை உறுதி செய்தப்பின், கதவை அடைத்துவிட்டு அவர் திரும்பி நிற்க, காத்திருந்த உதவியாளர் உடனடியாக வந்து அவருடன் நெருக்கமாகிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.
42 வயதான மாட் ஹான்காக் கடந்த ஆண்டு கொரோனா பிடியில் பிரித்தானியா தவித்துக்கொண்டிருந்த போது Gina Coladangelo-வை தனது உயர்மட்ட உதவியாளராக பணியமர்த்தினார்.
3 குழந்தைகளுக்கு தாயான கோடீஸ்வரி Gina Coladangelo (வயது 43), அவரது கணவர் Oliver Tress தொடங்கிய Oliver Bonas என்ற கடையின் தகவல் தொடர்பு இயக்குநராக உள்ளார்.
15 ஆண்டுகளாக மனைவி Martha Hoyer Millar உடன் வாழ்ந்து வரும் மாட் ஹான்காக், அவரை ஏமாற்றி Gina Coladangelo உடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் மாட் ஹான்காக் வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் அவர் தனது மனைவியிடம் மன்னிப்பு கேட்கவோ அல்லது அவரது நடத்தையை ஒப்புக் கொள்ளவோ இல்லை. மாறாக, நான் சமூக இடைவெளி விதிகளை மீறினேன் என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.
மக்கள் எதிர்பார்த்ததை செய்யத் தவறியதன் மூலம் நான் அவர்களை ஏமாற்றிவிட்டேன், அதற்காக மிகவும் வருந்துகிறேன். கொரோனா தொற்றுநோயிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான பணியில் நான் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறேன் என ஹான்காக் தனது அறிக்கைியல் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், மாட் ஹான்காக் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பது குறித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது அழுத்தம் அதிகரித்துள்ளது.