சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி: மேட் ஹென்றி காயம்: நியூசிலாந்து அணிக்கு பின்னடைவா?
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நியூசிலாந்து பந்து வீச்சாளர் மேட் ஹென்றி விளையாடுவது கேள்விக்குறியாகியுள்ளது.
மேட் ஹென்றி காயம்
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றிக்கு தோள்பட்டை காயம் ஏற்பட்டுள்ளதால், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகத்திற்குரியதாக உள்ளது.
இது நியூசிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
கடந்த புதன்கிழமை லாகூரில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் பந்து வீசும் போது மேட் ஹென்றிக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.
நாளை நடைபெற உள்ள இறுதிப் போட்டிக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், அவரது காயம் இன்னும் சரியாகவில்லை என கூறப்படுகிறது.
33 வயதான மேட் ஹென்றி, இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இதுவரை 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
குறிப்பாக, இந்திய அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் அவர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய பேட்ஸ்மேன்களை திணறடித்தார்.
அவரது இந்த அபார பந்துவீச்சு, இந்திய அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.
How big a blow would Matt Henry's absence be for New Zealand in the final? pic.twitter.com/34jP9Kts6A
— ESPNcricinfo (@ESPNcricinfo) March 7, 2025
மேட் ஹென்றிக்கு பதிலாக யார் விளையாடுவார்?
ஒருவேளை மேட் ஹென்றி விளையாட முடியாத நிலை ஏற்பட்டால், அவருக்கு பதிலாக ஜேக்கப் டஃபி அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.
ஆனால், மேட் ஹென்றிக்கு இணையான அனுபவம் மற்றும் திறமை டஃபிக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |