36 ஆண்டுகளில் முதல்முறை! டெஸ்டில் சாதனை படைத்த பந்துவீச்சாளர்
நியூசிலாந்தின் மேட் ஹென்றி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
மேட் ஹென்றி
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளரான மேட் ஹென்றி (Matt Henry) 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்மூலம் 870 புள்ளிகள் பெற்று டெஸ்ட் தரவரிசையில் ஜஸ்பிரித் பும்ராவுடன் முதலிடத்தை பகிர்ந்துகொண்டார்.
சாதனை
மேலும், 36 ஆண்டுகால வரலாற்றில் டெஸ்டில் முதலிடம் பிடித்த நியூசிலாந்து பந்துவீச்சாளர் என்ற சாதனையை மேட் ஹென்றி படைத்தார்.
1990ஆம் ஆண்டு நியூசிலாந்தின் சர் ரிச்சர்ட் ஹேட்லி (Sir Richard Hadlee) முதலிடத்தை பிடித்திருந்தார். அதற்கு முன்பு 1947யில் ஜேக் கோவி முதலிடத்தில் இருந்தார்.
மேட் ஹென்றி பெற்ற 870 புள்ளிகள், நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளரின் இரண்டாவது அதிகபட்ச புள்ளிகள் ஆகும்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |