பாகிஸ்தான் பேட்ஸ்மேனை புலம்ப வைத்து இங்கிலாந்து வீரர்! ஆப்சைடில் பிட்சாகி மிடில் ஸ்டம்பை தெறிக்கவிட்ட வீடியோ
பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து வீரர் பார்கின்சன் தன்னுடைய மாயாஜால சுழற்பந்து வீச்சு மூலம், இமாம்-உல்-ஹக்கை கிளீன் போல்டாக்கிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி அங்கு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகளுக்கிடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 331 ஓட்டங்கள் குவிக்க, இங்கிலாந்து அணி 48 ஓவரில் 332 ஓட்டங்கள் குவித்து மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்று கைப்பற்றியது.
You just can't play that ?
— England Cricket (@englandcricket) July 13, 2021
Absolute magic ?
Scorecard/clips: https://t.co/wtCtb2kz8n
??????? #ENGvPAK ?? @mattyparky96 pic.twitter.com/gYySs5Msju
இந்நிலையில், இப்போட்டியில், இங்கிலாந்து அணியின் இளம் சூழற்பந்து வீச்சாளரான பார்கின்சன், அணிக்காக 25 ஓவரை வீசிய போது, அவரது பந்து வீச்சை எதிர் கொண்ட பாகிஸ்தான் வீரர் இமாம்-உல்-ஹக், பந்தை கணிக்க முடியாமல் போல்டாகி வெளியேறினார்.
அதாவது, பந்தானது ஆப் ஸ்டம்புக்கு வெளியே பிட்சாகி, மிடில் ஸ்டம்பை பதம் பார்த்தது. இதனால் இது அப்படியே பார்க்க ஷேன் வார்னே பந்து வீச்சு போல் இருந்தது. அவுட்டான இமாம்-உல்-ஹக் புலம்பியபடியே மைதானத்தை விட்டு வெளியேறினார்.