124 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்: தனியாளாக 190 ஓட்டங்கள் குவித்த அவுஸ்திரேலிய வீரர்
Matt renshaw 190 runs vs south africa: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், அவுஸ்திரேலியாவின் மேட் ரென்ஷா டர்பன் டெஸ்டில் 190 ஓட்டங்கள் குவித்தார்.
மேட் ரென்ஷா 190 ஓட்டங்கள் எடுக்க, அவுஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 390 ஓட்டங்கள் குவித்தது.
ஹெட், ஸ்மித் சொதப்பல்
அவுஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டர்பனில் நடந்து வருகிறது.

தொடக்க வீரர்கள் நிக் மேடின்சன் டக்அவுட் ஆகியும், டிராவிஸ் ஹெட் 9 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்து சொதப்பினர்.
பின்னர் லபுஷேன் 37 ஓட்டங்களும், ஸ்டீவன் ஸ்மித் 25 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்க, கேரி (14) மற்றும் வெப்ஸ்டர் (4) சொதப்பினர். இதனால் 124 ஓட்டங்களுக்கு 6 விக்கெட் என அவுஸ்திரேலியா தடுமாறியது.

மேட் ரென்ஷா
எனினும், மறுமுனையில் நங்கூரமாக நின்று ஆடிய மேட் ரென்ஷா (Matt Renshaw) 190 ஓட்டங்கள் குவித்தார். அவரது ஸ்கோரில் 1 சிக்ஸர், 21 பவுண்டரிகள் அடங்கும்.

அணித்தலைவர் பேட் கம்மின்ஸ் 43 ஓட்டங்களும், நேதன் லயன் 27 ஓட்டங்களும் எடுக்க, அவுஸ்திரேலியா 390 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
வியான் முல்டர் 4 விக்கெட்டுகளும், மார்கோ ஜென்சென் 3 விக்கெட்டுகளும், அன்ரிச் நோர்ட்ஜே 2 விக்கெட்டுகளும், ஹார்மர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
