ODI கிரிக்கெட்டில் எந்த வீரரும் செய்யாத சாதனை படைத்த மேத்யூ பிரீட்ஸ்கே
ODI கிரிக்கெட்டில் முதல் வீரராக மேத்யூ பிரீட்ஸ்கே சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
தொடரை கைப்பற்றிய தென் ஆப்பிரிக்கா
இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள தென் ஆப்பிரிக்கா அணி, 3 ஒருநாள் மற்றும் 3 T20 கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
முதல் ஒருநாள் போட்டியில், தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்ற நிலையில், 2வது ஒருநாள் போட்டி, நேற்று லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் துடுப்பாட்டம் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி, 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு, 330 ஓட்டங்கள் குவித்தது.
331 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலியா அணி, 9 விக்கெட்களை இழந்து, 325 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
மேத்யூ பிரீட்ஸ்கே சாதனை
5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா அணி, இதன் மூலம் 2-0 என்ற கணக்கில் ODI தொடரை கைப்பற்றியது.
இந்த போட்டியில், 87 ஓட்டங்கள் எடுத்த தென் ஆப்பிரிக்க வீரர் மேத்யூ பிரீட்ஸ்கே, ODI வரலாற்றில் எந்த வீரரும் செய்யாத சாதனையை படைத்துள்ளார்.
26 வயதான மேத்யூ பிரீட்ஸ்கே, கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆடியதன் மூலம், ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.
இதுவரை 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், முதல் 5 போட்டிகளிலும் 50 ஓட்டங்களுக்கு அதிகமாக எடுத்துள்ளார்.
இதன் மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் இந்த சாதனையை படைத்த முதல் வீரர் என்று பெருமையை மேத்யூ பிரீட்ஸ்கே படைத்துள்ளார்.
இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள மேத்யூ பிரீட்ஸ்கே, 4 அரைசதம் மற்றும் ஒரு சதத்துடன், 92.60 சராசரியுடன் 463 ஓட்டங்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 150 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |