சரிந்த விக்கெட்டுகள்! அரைசதம் விளாசி அணியை மீட்ட கேப்டன்
கிராஸ் 85 ஓட்டங்களுடன், மூன்று கேட்சுகளை பிடித்து மிரட்டினார்
ஸ்காட்லாந்து அணி வீரர் மார்க் வாட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஸ்காட்லாந்து 254 ஓட்டங்கள் எடுத்தது.
அபெர்டீன் மன்னோபீல்ட் பார்க் மைதானத்தில் ஸ்காட்லாந்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி நடந்து வருகிறது.
முதலில் ஆடிய ஸ்காட்லாந்து அணியில் தொடக்க வீரர்கள் கோட்ஸர், கிரேக் மற்றும் மைக்கேல் ஜோன்ஸ் ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
ஸ்காட்லாந்து அணி 13.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 54 ஓட்டங்களுடன் தடுமாறியது. அப்போது கைகோர்த்த மெக்லியோட் மற்றும் கேப்டன் மாத்யூ கிராஸ் இருவரும் பொறுப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர்.
PC: Twitter
இவர்களது பார்ட்னர்ஷிப் மூலம் 113 ஓட்டங்கள் கிடைத்தது. 107 பந்துகளில் 77 ஓட்டங்கள் எடுத்திருந்த மெக்லியோட் பசில் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் வந்த வீரர்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில், கேப்டன் கிராஸ் நங்கூரம் போன்ற ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடைசி ஓவரில் ஆட்டமிழந்த அவர் 92 பந்துகளில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 85 ஓட்டங்கள் எடுத்தார்.
PC: Twitter
ஸ்காட்லாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 254 ஓட்டங்கள் குவித்தது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தரப்பில் பசில், அஹ்மத் ரசா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதனைத் தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி துடுப்பாட்டம் செய்தது.