முதல் சர்வதேச போட்டி.. இலங்கையின் முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்
தனது முதல் சர்வதேச போட்டியில் களமிறங்கிய அவுஸ்திரேலிய வீரர் குஹனேமன், இலங்கை அணியின் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பிபிஎல் தொடர்களில் சிறப்பாக விளையாடிய அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேத்யூ குஹனேமன், இன்று இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் களமிறங்கினார்.
அவருக்கு இதுதான் முதல் சர்வதேச போட்டி ஆகும். ஆட்டத்தின் 6வது ஓவரை வீசிய அவர், இலங்கை அணியின் தொடக்க வீரர் பதும் நிசங்காவின் விக்கெட்டை கைப்பற்றினார்.
What a lovely moment!
— cricket.com.au (@cricketcomau) June 16, 2022
Marnus Labuschagne presents his Queensland, and now Australian, teammate Matthew Kuhnemann with his ODI cap #SLvAUS pic.twitter.com/EVD83QmNLg
இது அவருடைய முதல் சர்வதேச விக்கெட்டாக அமைந்தது. அதன் பின்னர், 18 ஓட்டங்களில் இருந்த சமிக்க கருணாரத்னேவை ஆட்டமிழக்க செய்தார்.
மொத்தம் 10 ஓவர்களை வீசிய குஹனேமன் 48 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 25 வயதாகும் குஹனேமன் 21 முதல்தர போட்டிகளில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2-48 (10) and two catches (so far).
— cricket.com.au (@cricketcomau) June 16, 2022
A fine debut from Matthew Kuhnemann #SLvAUS pic.twitter.com/fvFR5RjaGH