இங்கிலாந்தின் தலைமை பயிற்சியாளர் ராஜினாமா! இடைக்கால பயிற்சியாளராக மிரட்டல் வீரர்
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் மேத்யூ மோட் பதவி விலகியுள்ளார்.
தலைமை பயிற்சியாளர்
அவுஸ்திரேலியாவின் மேத்யூ மோட் (Matthew Mott) 2022ஆம் ஆண்டில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
அவரது தலைமையின் கீழ் 2022 டி20 உலகக்கிண்ணத்தை இங்கிலாந்து கைப்பற்றியது.
அதேபோல் அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களிலும் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
மேத்யூ மோட்
இந்த நிலையில், மேத்யூ மோட் தனது பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். பதவி விலகியது குறித்து அவர் கூறுகையில்,
''இங்கிலாந்து ஆடவர் அணிக்கு பயிற்சியாளராக இருந்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்; அது ஒரு மரியாதை. கடந்த இரண்டு ஆண்டுகளில் வெற்றியை அடைவதற்கான முயற்சியில் நாங்கள் அனைத்தையும் செய்துள்ளோம். மேலும், 2022யில் ஒரு அற்புதமான டி20 உலகக்கிண்ண வெற்றி உட்பட அந்தக் காலகட்டத்தில் அணி வெளிப்படுத்திய தன்மை மற்றும் ஆர்வத்தைப் பற்றி நான் நம்பமுடியாத அளவிற்கு பெருமைப்படுகிறேன்'' என தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இடைக்கால பயிற்சியாளராக முன்னாள் வீரர் மார்க்ஸ் ட்ரெஸ்கோதிக் (Marcus Trescothick) செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளார்.
உதவி பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ட்ரெஸ்கோதிக், செப்டம்பரில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தனது பணியை தொடங்குவார் என கூறப்படுகிறது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |