56 பந்துகளில் 121 ஓட்டங்கள் விளாசிய கேப்டன்: ஆனாலும் கடைசி பந்தில் தோல்வி
மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் போட்டியில், வாஷிங்டன் ஃப்ரீடம் அணி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸை வீழ்த்தியது.
ஆன்ட்ரிஸ் கோஸ் 73 ஓட்டங்கள்
சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் மற்றும் வாஷிங்டன் ஃப்ரீடம் அணிகளுக்கு இடையிலான சேலஞ்சர் போட்டி ஆக்லாந்தில் நடந்தது.
முதலில் ஆடிய வாஷிங்டம் ஃப்ரீடம் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 238 ஓட்டங்கள் குவித்தது.
ஆன்ட்ரிஸ் கோஸ் 73 (40) ஓட்டங்களும், ஸ்டீவன் ஸ்மித் 43 (20) ஓட்டங்களும் விளாசினர். சேவியர் பார்ட்லெட் 3 விக்கெட்டுகளும், குலாம் முடஸ்ஸர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
மேத்யூ ஷார்ட் ருத்ரதாண்டவம்
பின்னர் ஆடிய சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணியில் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிய, அணித்தலைவர் மேத்யூ ஷார்ட் தனியாளாக ருத்ரதாண்டவம் ஆடினார்.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 22 ஓட்டங்கள் தேவைப்பட, சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணியால் 14 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதன்மூலம் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதிவரை களத்தில் நின்ற மேத்யூ ஷார்ட் (Matthew Short) 56 பந்துகளில் 121 ஓட்டங்கள் குவித்தார். அவரது ஸ்கோரில் 8 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகள் அடங்கும்.
There must be something in the water ‼️ Shorty smashes his first MLC century here in Oakland 💯 pic.twitter.com/kDBeynjiyA
— Cognizant Major League Cricket (@MLCricket) July 17, 2026
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |