அரையிறுதிக்கு முன்னேறிய அவுஸ்திரேலிய அணிக்கு சிக்கல்: முக்கிய வீரர் விளையாடுவதில் சந்தேகம்
அவுஸ்திரேலிய அணி வீரர் மேத்யூ ஷார்ட் காயம் காரணமாக அரையிறுதியில் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அரையிறுதிக்கு முன்னேறிய அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி லாகூரில் நடந்தது.
ஆப்கானிஸ்தான் அணி 274 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய அவுஸ்திரேலியா 1 விக்கெட்டுக்கு 109 ஓட்டங்கள் எடுத்திருந்தது. அப்போது மழை குறுக்கிட்டது.
அதன் காரணமாக போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் அவுஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
பின்னடைவு
இப்போட்டியில் மேத்யூ ஷார்ட் (Matthew Short) ஃபீல்டிங்கின்போது காயமுற்றதால், அரையிறுதிப் போட்டியில் அவர் விளையாடுவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
சுழற்பந்து வீசக்கூடிய அதிரடி வீரரான ஷார்ட் ஒருவேளை விளையாடவில்லையென்றால் அவுஸ்திரேலிய அணிக்கு பின்னடைவாக அமையும்.
அவர் விளையாடாத பட்சத்தில், அவருக்கு பதிலாக ஜேக் பிரெசர் மெக்குர்க் தொடக்க வீரராக களமிறங்கலாம் என்று கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |