சரவெடியாய் 34 பந்தில் அரைசதம் விளாசிய இருவர்! வாணவேடிக்கை வீடியோ
மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் 187 ஓட்டங்கள் குவித்துள்ளது.
கூட்டணி அரைசதம்
பிக் பாஷ் லீக் தொடரின் 38வது போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் (Melbourne Stars) மற்றும் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் (Hobart Hurricanes) அணிகள் மோதி வருகின்றன.
நாணய சுழற்சியில் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி, ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியில் களமிறங்கிய மேத்யூ வேட் மற்றும் பென் மெக்டெர்மாட் இருவரும் சரவெடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
Ben McDermott with an enormous second decker! ? #BBL13 pic.twitter.com/RTEKiu4TgD
— KFC Big Bash League (@BBL) January 15, 2024
இவர்களின் கூட்டணி 10 ஓவரில் 86 ஓட்டங்கள் குவித்தது. 34 பந்துகளில் அரைசதம் அடித்த பென் மெக்டெர்மாட் (Ben McDermott), 2 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 50 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
McDermott launches his second six of the night! ? #BBL13 pic.twitter.com/g1OBIxRRmb
— KFC Big Bash League (@BBL) January 15, 2024
மேத்யூ வேட்
அவரைத் தொடர்ந்து மேத்யூ வேட்-வும் அதிரடியாக 34 பந்துகளில் அரைசதம் அடித்தார். அவரின் ஆட்டத்தினால் மெல்போர்ன் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.
வேட் 41 பந்துகளில் ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 63 ஓட்டங்கள் குவித்த நிலையில் டேனியல் லாரன்ஸ் ஓவரில் அவுட் ஆனார்.
Matthew Wade, that's a serious shot! ?#BBL13 pic.twitter.com/xBzmy6s8xh
— cricket.com.au (@cricketcomau) January 15, 2024
அதன் பின்னர் களமிறங்கிய வீரர்கள் லாரன்ஸ், வாசிம் ஓவர்களில் விக்கெட்டுக்களை பறிகொடுத்தனர். எனினும் கேப்டன் நாதன் எல்லிஸ் 5 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 16 ஓட்டங்கள் விளாசினார்.
இதன்மூலம் ஹோபர்ட் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 187 ஓட்டங்கள் குவித்தது. மெல்போர்ன் அணியின் தரப்பில் டேனியல் லாரன்ஸ் 4 விக்கெட்டுகளும், இமாத் வாசிம் மற்றும் கால்டர் நைல் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
@X (@BBL)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |