மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு: யாழ்ப்பாணத்தில் திறந்து வைப்பு
யாழ்ப்பாணத்தில் மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தின் நல்லூரில் மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு மாவீரர்களின் பெற்றோர்கள், மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிரை தியாகம் செய்த போராளிகளை நினைவு கூறும் மாவீரர் வாரம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியுள்ளது.
இதனை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்பு நிறுவப்பட்ட மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு திறந்து வைக்கப்பட்டது.
கல்வெட்டின் பொதுச்சுடரினை மாவீரர்களின் உறவினர் ஒருவர் ஏற்றிவைத்து மலரஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர், முன்னாள் போராளிகள், அரசியல் பிரதிநிதிகள் , உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |