76 பந்துகளில் அதிரடி சதமடித்த மேக்ஸ்: அமீரகத்தை வீழ்த்திய நெதர்லாந்து அணி
Max o'dowd 103 runs in 79 balls vs uae: ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில், நெதர்லாந்து அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மேக்ஸ் ஓ' தவுத் அதிரடி சதம் விளாச, நெதர்லாந்து அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியை வீழ்த்தியது.
ராகுல் சோப்ரா அரைசதம்
துபாயில் நடந்த ஒருநாள் போட்டியில் நெதர்லாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதின.
முதலில் ஆடிய ஐக்கிய அரபு அமீரகம் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 244 ஓட்டங்கள் எடுத்தது.
அணித்தலைவர் ராகுல் சோப்ரா (Rahul Chopra) 82 ஓட்டங்களும், அக்ஷ்தீப் நாத் 68 ஓட்டங்களும் எடுத்தனர். டிம் வான் டெர் குக்டென் 5 விக்கெட்டுகளும், ஆர்யன் தத், பவுல் வான் மீகெரென் மற்றும் பஸ் டி லீட் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
மேக்ஸ் ஓ'தவுத் வாணவேடிக்கை
பின்னர் ஆடிய நெதர்லாந்து அணி 43.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 245 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
அதிரடி ஆட்டத்தில் மிரட்டிய தொடக்க வீரரான மேக்ஸ் ஓ'தவுத் (Max O'Dowd) 79 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 103 ஓட்டங்கள் விளாசினார்.
மைக்கேல் லேவிட் 36 (51) ஓட்டங்களும், ஆர்யன் தத் 36 (36) ஓட்டங்களும் எடுத்தனர். அமீரக அணியின் தரப்பில் குஸைமா 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
