F1 கார் பந்தயம்: இறுதி வளைவில் சுவரில் மோதிய மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் கார்: ரஸ்ஸல் அசத்தல்
F1 கார் பந்தயத்தின் பிரபல சாம்பியனான மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் ஆஸ்திரிய கிராண்ட் பிரிக்ஸ் தகுதிச் சுற்றில் விபத்தில் சிக்கினார்.
விபத்தில் சிக்கிய மேக்ஸ் வெர்ஸ்டாப்பன்
ஆஸ்திரிய கிராண்ட் பிரிக்ஸ் தகுதிச் சுற்றில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் ரெட் புல் ரிங் சுற்றின் இறுதிப் பகுதியில் விபத்தில் சிக்கினார்.
Q3 தகுதிச் சுற்றின் இறுதி நிமிடங்களில் முதலிடத்தை பிடிக்க வெர்ஸ்டாப்பன் கடுமையாக போராடி கொண்டிருந்த போது, கடைசிக்கு முந்தைய வளைவில் வெர்ஸ்டாப்பன் கார் கட்டுப்பாட்டை இழந்து பக்கவாட்டு பகுதியில் சறுக்கிச் சென்று சுவரில் மோதியது.

இந்த விபத்தில் வெர்ஸ்டாப்பன் கார் பலத்த சேதமடைந்து இருந்தாலும், அதிர்ஷ்டவசமாக எந்தவொரு பெரிய காயமும் இன்றி மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் உயிர் தப்பினார்.
மேலும் இந்த விபத்தை தொடர்ந்து பந்தயத்திற்கு மஞ்சள் கொடி காட்டப்பட்டது, இதனால் மற்ற வீரர்களும் இறுதி சுற்றை முடிக்க சிறிது நேரம் கூடுதலாக போராடிய வேண்டியது இருந்தது.
ரஸ்ஸல் அசத்தல்
விபத்திற்கு முன்னதாக பெராரியின் லூயிஸ் ஹாமில்டன் மற்றும் சார்லஸ் லெக்லெர்க் ஆகிய இருவரும் முதல் இரண்டு இடங்களில் முன்னணி வகித்து வந்தனர்.
ஆனால் விபத்துக்கு பிறகு, அதாவது மஞ்சள் கொடி காட்டப்பட்ட பிறகு, மெர்சிடிஸ் அணியின் ஜார்ஜ் ரஸ்ஸல் அபாரமான வேகம் மற்றும் நேரத்தை பதிவு செய்து தனக்கான நிலையை தட்டிச் சென்றார்.

இந்நிலையில், மஞ்சள் கொடி காட்டப்பட்ட பிறகு ரஸ்ஸல் தன்னுடைய காரின் வேகத்தை போதுமான அளவு குறைத்தாரா என்ற கேள்வி எழுந்து விசாரணையும் தொடங்கப்பட்டது.
விசாரணையில் மெர்சிடிஸ் அணியின் ஜார்ஜ் ரஸ்ஸல் வேகத்தை குறைத்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |