காலை நொண்டிக்கொண்டே 201 ரன்! அற்புதம் நிகழ்த்திய இரும்புக்கை மாயாவி மேக்ஸ்வெல்.. ஸ்தம்பித்துபோன மைதானம்
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மேக்ஸ்வெலின் அற்புதமான இரட்டை சதத்தினால் அவுஸ்திரேலிய அபார வெற்றி பெற்றது.
மும்பையில் நடந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 291 ஓட்டங்கள் குவித்தது. இப்ராஹிம் ஜட்ரான் 129 ஓட்டங்கள் குவித்தார்.
பின்னர் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி விக்கெட்களை தொடக்கத்திலேயே பறிகொடுத்தது. 91 ஓட்டங்களுக்கு 7 விக்கெட் என அந்த அணி தத்தளித்த நிலையில் மேக்ஸ்வெல் காப்பாளனாக மாறினார்.
மிரட்டலாக அவர் சதம் விளாசிய நிலையில் தசைபிடிப்பு ஏற்பட்டு அவதிப்பட்டார். ஆனாலும் தனது கைகளை மட்டுமே ஆயுதமாகக் சிக்ஸர், பவுண்டரிகள் என அடித்து நொறுக்கிய அவர் 195 ஓட்டங்களில் இருந்து சிக்ஸர் அடித்தார்.
இதன்மூலம் அவர் இரட்டைசதத்தை எட்டியதுடன், அவுஸ்திரேலிய மிரட்டலான வெற்றியை பெற்றது.
An exceptional double ton from an injured Glenn Maxwell helps Australia to a famous victory ?@mastercardindia Milestones ?#AUSvAFG pic.twitter.com/OavPr2ZRAN
— ICC (@ICC) November 7, 2023
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |