7 ஓவர் போட்டியில் ருத்ரதாண்டவமாடிய மேக்ஸ்வெல்! மிரண்டுபோன பாகிஸ்தான்
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் அவுஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் 43 ஓட்டங்கள் விளாசினார்.
மேக்ஸ்வெல் அதகளம்
பிரிஸ்பேனில் அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நடக்கிறது.
மழை காரணமாக போட்டி தாமதமானதால், இன்னிங்சிற்கு 7 ஓவர்கள் என மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பாடியது.
மேத்யூ ஷார்ட் 7 ஓட்டங்களிலும், ஜேக் பிரேசர் மேக்கர்க் 9 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த மேக்ஸ்வெல் ருத்ரதாண்டவம் ஆடினார்.
'This is why people pay a lot of money to watch this guy bat' #AUSvPAK pic.twitter.com/Zwab5Pnw3j
— cricket.com.au (@cricketcomau) November 14, 2024
19 பந்துகளை எதிர்கொண்ட அவர், 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 43 ஓட்டங்கள் குவித்தார். அப்பாஸ் அப்ரிடி வீசிய ஓவரில் உஸ்மான் கானிடம் கேட்ச் கொடுத்து மேக்ஸ்வெல் ஆட்டமிழந்தார்.
அதனைத் தொடர்ந்து டிம் டேவிட் 10 ஓட்டங்களும், ஸ்டோய்னிஸ் 7 பந்துகளில் 21 ஓட்டங்களும் எடுக்க, அவுஸ்திரேலிய அணி 7 ஓவர்களில் 93 ஓட்டங்கள் குவித்தது.
அப்பாஸ் அப்ரிடி 2 விக்கெட்டுகளும், நசீம் ஷா மற்றும் ஹாரிஸ் ராப் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
𝐌𝐚𝐝 𝐌𝐚𝐱 𝐩𝐮𝐭𝐬 𝐨𝐧 𝐚 𝐬𝐡𝐨𝐰 𝐚𝐭 𝐭𝐡𝐞 𝐆𝐚𝐛𝐛𝐚, 𝐁𝐫𝐢𝐬𝐛𝐚𝐧𝐞! 🔥🤩
— Sportskeeda (@Sportskeeda) November 14, 2024
Glenn Maxwell departs after a quick-fire 43-run knock off just 19 deliveries! 🇦🇺🌟#AUSvPAK #T20Is #Gabba #Sportskeeda pic.twitter.com/0EQFopMieZ
அவுஸ்திரேலியா வெற்றி
அதன் பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 24 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது.
ஹஸீபுல்லா கான் 12 (8) ஓட்டங்களும், அப்பாஸ் அப்ரிடி 20 (10) ஓட்டங்களும் எடுக்க, பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுக்கு 64 ஓட்டங்கள் எடுத்து தோல்வியுற்றது.
அவுஸ்திரேலிய அணியின் தரப்பில் பார்ட்லெட், எல்லிஸ் தலா 3 விக்கெட்டுகளும், ஆடம் ஜாம்பா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |