ராஜஸ்தான் பந்துவீச்சை துவம்சம் செய்த மேக்ஸ்வெல், டு பிளெஸ்ஸிஸ் கூட்டணி! இமாலய இலக்கு நிர்ணயித்த RCB அணி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 190 ஓட்டங்கள் இலக்கினை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நிர்ணயித்துள்ளது.
பெங்களூரு அணி 189 ஓட்டங்கள் குவிப்பு
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்து வரும் போட்டியில் பெங்களூரு அணி 9 விக்கெட் இழப்புக்கு 189 ஓட்டங்கள் குவித்துள்ளது.
கேப்டன் விராட் கோலி முதல் பந்திலேயே ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து, களமிறங்கிய ஷாபாஸ் அஹ்மது 2 ஓட்டங்களில் வெளியேறினார்.
அதன் பின்னர் களமிறங்கிய மேக்ஸ்வெல், தொடக்க வீரர் டு பிளெஸ்ஸிஸ் உடன் இணைந்து வாணவேடிக்கை காட்டினார்.
Third one this season and in a jiffy for Maxi! ?
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 23, 2023
Big show today ?#PlayBold #ನಮ್ಮRCB #IPL2023 #GoGreen #RCBvRR @Gmaxi_32 pic.twitter.com/sHifs87m3p
மிரட்டல் கூட்டணி
இவர்களது கூட்டணி 127 ஓட்டங்கள் குவித்தது. டு பிளெஸ்ஸிஸ் 39 பந்துகளில் 2 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 62 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அவரது விக்கெட்டைத் தொடர்ந்து பெங்களூரு அணியின் விக்கெட்டுகள் சரிய தொடங்கியது. மேக்ஸ்வெல் 44 பந்துகளில் 4 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 77 ஓட்டங்கள் விளாசினார்.
Round up the high fives! ?
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 23, 2023
Fifty No. 5⃣ this season for Faf! ?#PlayBold #ನಮ್ಮRCB #IPL2023 #GoGreen #RCBvRR @faf1307 pic.twitter.com/RCfNRLkH1V
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தரப்பில் போல்ட் மற்றும் சந்தீப் சர்மா தலா 2 விக்கெட்டுகளும், அஸ்வின் மற்றும் சஹால் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
Same song, different verse ??
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 23, 2023
Yet another brilliant century partnership for Faf & Maxi! ?#PlayBold #ನಮ್ಮRCB #IPL2023 #GoGreen #RCBvRR pic.twitter.com/h0YnLkehj7