40 பந்தில் 100! அசுர தாண்டவமாடிய மேக்ஸ்வெல்..மைதானத்தில் சிக்ஸர் மழை
அவுஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் 40 பந்துகளில் சதம் விளாசினார்.
நெதர்லாந்துக்கு 400 இலக்கு
டெல்லியில் நடந்து வரும் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அணி 399 ஓட்டங்கள் குவித்துள்ளது.
டேவிட் வார்னர் 104 ஓட்டங்களும், ஸ்மித் 71 ஓட்டங்களும், லபுசாக்னே 62 ஓட்டங்களும் விளாசி ஆட்டமிழந்தனர்.
அதன் பின்னர் களம் கண்ட மேக்ஸ்வெல் சரவெடியாய் வெடித்தார். எதிரணியை பந்தாடிய அவர் தொடர்ந்து இரண்டு சிக்ஸர்கள் அடித்து சதத்தை எட்டினார்.
மேக்ஸ்வெல் ருத்ர தாண்டவம்
அதிலும் 40 பந்துகளில் சதம் விளாசி மேக்ஸ்வெல் சாதனை படைத்தார். உலகக்கோப்பையில் அடிக்கப்பட்ட அதிவேக சதம் இதுவாகும்.
மொத்தம் 44 பந்துகளை எதிர்கொண்ட மேக்ஸ்வெல் 8 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 106 ஓட்டங்கள் குவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |