ஒட்டுமொத்த மைதானத்தையும் வாயை பிளக்க வைத்த மேக்ஸ்வெல்! மிரட்டலான கேட்ச் (வீடியோ)
பிக்பாஷ் லீக் போட்டியில் கிளென் மேக்ஸ்வெல் பிடித்த கேட்ச் மைதானத்தையே அலறவிட்டது.
மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் 149 ஓட்டங்கள் எடுத்தது.
முன்னதாக பிரிஸ்பேன் அணியின் துடுப்பாட்டத்தின்போது 17வது ஓவரை டான் லாரென்ஸ் வீசினார்.
GLENN MAXWELL!
— KFC Big Bash League (@BBL) January 1, 2025
CATCH OF THE SEASON. #BBL14 pic.twitter.com/3qB9RaxHNb
முதல் பந்தை வில் பிரெஸ்ட்விட்ஜ் சிக்ஸருக்கு விளாசினார். ஆனால், எல்லையில் இருந்த கிளென் மேக்ஸ்வெல் (Glenn Maxwell) தாவிச்சென்று பந்தை சிக்ஸரில் இருந்து தடுத்தார்.
மேலும், எல்லைக்கு உள்ளே பந்தை தட்டிவிட்டு அபாரமாக கேட்ச் செய்தார். இந்த கேட்சைப் பார்த்து ஒட்டுமொத்த மைதானமும் மிரண்டுபோனது. பிரெஸ்ட்வெட்ஜ் ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |