மின்னல் வேகத்தில் மிரள வைத்த புது மாப்பிள்ளை மேக்ஸ்வெல்..! ஒரு நிமிடம் உறைந்துபோன ரசிகர்கள்
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி வீரர் மேக்ஸ்வெல் ரன் அவுட் செய்த விதம் ரசிகர்களை மிரள வைத்தது.
ஐபிஎல் தொடரின் 18வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த மேக்ஸ்வெல் நேற்றைய போட்டியில் பெங்களூரு அணியுடன் இணைந்தார்.
புதிதாக திருமணம் முடித்துள்ள மேக்ஸ்வெல் அணியில் இணைந்திருப்பதால் அவரது பேட்டிங் மீது பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்திருந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் பீல்டிங்கில் மிரட்டினார் மேக்ஸ்வெல்.
ஆட்டத்தின் 10வது ஓவரில் மும்பை அணி வீரர் திலக் வர்மா ஒரு ரன் எடுக்க ஓடினார். பீல்டர்கள் யாரும் அருகில் இல்லாததால் எளிதில் கிரீஸை அடைந்து விடலாம் என அவர் நினைத்தபோது, தூரத்தில் இருந்த மேக்ஸ்வெல் மின்னல் வேகத்தில் வந்து ஸ்டெம்பை நோக்கி துல்லியமாக பந்தை எறிந்தார்.
இதனால் திலக் வர்மா ஒரு ரன் கூட எடுக்காமல் வெளியேறினார். அவரது விக்கெட் பெங்களூரு அணிக்கு திருப்புமுனையாக அமைந்தது. மேலும் மேக்ஸ்வெல்லின் ரன் அவுட்டை பார்த்து அரங்கில் இருந்த ரசிகர்கள் ஒரு நிமிடம் உறைந்து போய்விட்டனர்.
Glenn Maxwell isn't real actually#RCBvsMI #RCB pic.twitter.com/hmEcCBJGW3
— // Tsitsipas thinker (@tanyadiors) April 9, 2022