14 கோடிக்கு நான் ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்பட்டது! முதன் முறையாக மனம் திறந்த மேக்ஸ்வேல்
அவுஸ்திரேலியா அணியின் அதிரடி ஆட்டக்காரரான மேக்ஸ்வேல், ஐபிஎல் ஏலத்தில் 14 கோடிக்கு மேல் வாங்கப்பட்டது குறித்து முதன் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடருக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அதுமட்டுமின்றி வெளிநாட்டு வீரர்கள் கலந்து கொள்வதற்கு மிகவும் ஆசைப்படுகின்றனர்.
அதற்கு முக்கிய காரணம் பணம், திறமை இருந்தால், அவர்களை ஏலத்தில் எடுக்க ஐபிஎல் அணி நிர்வாகம் போட்டி போட்டு எடுக்கம்.
அப்படிப்பட்ட ஒரு வீரர் தான் மேக்ஸ்வேல். அவுஸ்திரேலியா அணி வீரரான இவரை இந்தாண்டு பெங்களூரு அணி 14.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தில் சரியாக விளையாடாத போதிலும் 14.25 கோடிக்கு ஏலம் போனது குறித்து மேக்ஸ்வெல்லிடம் கேள்வி கேட்கப்பட்டது.
இது குறித்து மேக்ஸ்வேல் கூறுகையில், ஒவ்வொரு அணிகளும் ஆஃப் ஸ்பின் போடத் தெரிந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனை எதிர்பார்த்து இருந்தனர்.
நான் இவ்வளவு தொகைக்கு ஏலம் போவேன் என்பது நான் எதிர்பார்த்த ஒன்றுதான். இதில் எனக்கு எந்த விதமான ஆச்சிரமும் இல்லை
