சிட்னி சிக்ஸர்ஸை வேட்டையாடிய மேக்ஸ்வெல்! 32 பந்தில் 58 ரன் விளாசல் (வீடியோ)
பிக்பாஷ் லீக்கில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் வீரர் க்ளென் மேக்ஸ்வெல் 26 பந்துகளில் அரைசதம் விளாசினார்.
பிக்பாஷ் லீக்
மெல்போர்ன் ஸ்டார்ஸ் (Melbourne Stars) மற்றும் சிட்னி சிக்ஸர்ஸ் (Sydney Sixers) அணிகள் மோதும் பிக்பாஷ் லீக் போட்டி நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற சிட்னி சிக்ஸர்ஸ் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி முதலில் துடுப்பாடியது.
SENT!
— KFC Big Bash League (@BBL) January 9, 2025
Glenn Maxwell with the reverse lap for SIX 😲 #BBL14 pic.twitter.com/G6PxItNO97
ஹர்பர் 4, டக்கெட் 20 (14) ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து டேன் லாரன்ஸ் 14 ஓட்டங்கள் எடுத்து வெளியேற, அணித்தலைவர் ஸ்டோய்னிஸும் அவுட் ஆனார்.
மேக்ஸ்வெல் அதிரடி
பின்னர் களமிறங்கிய க்ளென் மேக்ஸ்வெல் (Glenn Maxwell) அதிரடியில் மிரட்டினார். மறுமுனையில் பியூ வெப்ஸ்டர் (Beau Webster) நிதானமாக ஓட்டங்கள் சேர்த்தார்.
இந்தக் கூட்டணி 53 பந்துகளில் 88 ஓட்டங்கள் குவித்தது. வெப்ஸ்டர் 41 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 48 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
50 for Maxi!
— KFC Big Bash League (@BBL) January 9, 2025
Glenn Maxwell brings up his half-century off 26 balls. #BBL14 pic.twitter.com/HSSeYuwxOu
எனினும் சரவெடியாய் வெடித்த மேக்ஸ்வெல் 26 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதன்மூலம் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 156 ஓட்டங்கள் எடுத்தது. மேக்ஸ்வெல் 32 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 58 ஓட்டங்கள் விளாசினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |