RCBயை விட்டு வெளியேறும் அவுஸ்திரேலிய வீரர்? Unfollow செய்ததால் அதிர்ச்சியில் ரசிகர்கள்
அவுஸ்திரேலிய வீரர் க்ளென் மேக்ஸ்வெல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், RCBயை Unfollow செய்ததால் அவர் அணியை விட்டு வெளியேறலாம் என்ற யூகங்கள் கிளம்பியுள்ளது.
அதிரடி துடுப்பாட்டத்தில் மிரட்டக்கூடியவரும், சுழற்பந்து வீச்சில் அவ்வவப்போது விக்கெட்டுகளை வீழ்த்தும் வீரராக விளங்குபவர் க்ளென் மேக்ஸ்வெல் (Glenn Maxwell).
ஐபிஎல் தொடரில் RCB அணிக்காக விளையாடி வரும் மேக்ஸ்வெல், கடந்த சீசனில் கடுமையாக சொதப்பினார். இதனால் அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன.
அவுஸ்திரேலிய அணிக்காக வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் சிறந்த வீரராக இருக்கும் மேக்ஸ்வெல், ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார்.
இந்த நிலையில், RCB அணி ஐபிஎல் 2024 சீசனில் தோல்வியுற்றதைத் தொடர்ந்து மேக்ஸ்வெல் அணியை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் RCB அணியை Unfollow செய்துள்ளார். இதன்மூலம் மேக்ஸ்வெல் IPL 2025யில் புதிய உரிமைக்காக விளையாடத் தயாராக இருப்பதாக தெளிவான குறிப்பினை கொடுத்துள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் கூறுகின்றன.
ஆனால், இது RCB ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அடுத்த சீசனில் விராட் கோலி மட்டுமே தக்கவைக்கப்படும் உறுதியான வீரராக இருப்பார் என்று கூறப்படுகிறது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |