உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்: பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய அவுஸ்திரேலியா
பாகிஸ்தானுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் அவுஸ்திரேலிய அணி 351 ஓட்டங்கள் குவித்தது.
வார்னர் ருத்ர தாண்டவம்
ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன.
முதலில் ஆடிய அவுஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் ருத்ர தாண்டவம் ஆடினார்.
பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சை துவம்சம் செய்த வார்னர் 33 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 48 ஓட்டங்கள் விளாசினார்.
மேக்ஸ்வெல் அதகளம்
மார்ஷ் 31 ஓட்டங்களும், ஸ்மித் 27 ஓட்டங்களும் எடுத்து வெளியேறினர். நிலைத்து நின்று ஆடிய லபுசாக்னே 40 (31) ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார்.
அலெக்ஸ் கேரி 11 ஓட்டங்களில் வெளியேறியதைத் தொடர்ந்து மேக்ஸ்வெல் சரவெடியாய் வெடித்தார். சிக்ஸர்களை தெறிக்கவிட்ட மேக்ஸ்வெல் 71 பந்துகளில் 6 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 77 ஓட்டங்கள் விளாசினார்.
கிரீன் அரைசதம்
அடுத்து கைகோர்த்த கிரீன் - இங்கிலிஸ் ஜோடி 83 ஓட்டங்கள் குவித்தது. இங்கிலிஸ் 30 பந்துகளில் 48 ஓட்டங்கள் விளாசினார். கடைசி வரை களத்தில் நின்ற கிரீன் 40 பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்தார்.
இதன்மூலம் அவுஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுக்கு 351 ஓட்டங்கள் குவித்தது. பாகிஸ்தான் தரப்பில் உஸமா மிர் 2 விக்கெட்டுகளும், ராஃப், வாசிம் ஜூனியர், ஷதாப் கான் மற்றும் நவாஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
Twitter (Cricbuzz)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |