பிரான்சில் வரும் 19-ஆம் திகதி முதல் இவை எல்லாம் திறக்கப்படும்! வெளியான அறிவிப்பு
பிரான்சில் வரும் 19-ஆம் திகதி முதல் சூதாட்ட மையங்கள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக, பிரான்சில் ஊரடங்கு அமுலில் உள்ளது. இதன் காரணமாக கடைகள் போன்றவை அடைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சூதாட்ட மையங்கள் வரும் 19 முதல் திறக்கப்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாகத் தானியங்கி பணச் சூதாட்டங்கள் (machines à sous) மட்டும் ஆரம்பிக்கப்டும் எனவும், இதில் 35 வாடிக்கையாளர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின், ஜுன் 9-ஆம் திகதி முதல் அனைத்து சூதாட்ட மேசைகளும் இயங்கும் எனவும், சுகாதாரப் பாதுகாப்பு மற்றும், சமூகப் பாதுகாப்பு இடைவெளிகள் பின்பிற்ற வேண்டும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.