சுதந்திரம் என்பது மறுக்கப்பட முடியாத உரிமை: ஊடக சுதந்திரத்திற்கான சர்வதேச நாள்
சுதந்திரம் என்பது ஒவ்வொரு உயிரிக்கும் கிடைக்கவேண்டிய மறுக்கப்படமுடியாத ஒரு உரிமையாகும். அதுமறுக்கப்படுகின்றவிடத்து தனக்கான சுதந்திரத்திற்காக இந்த உலகின் ஒவ்வொரு உயிரியும் போராக்கொண்டிருக்கிறது அந்த பட்டியலில் மனித இனத்தின் சுதந்திரத்தின் மீதான போராட்டம் என்பது தனித்துவங்கள் நிறைந்ததாகும்.
உலகின் சில நாடுகளைப்பொறுத்தவரை ஏனைய உயிரிக்களைவிட மனித சுதந்திரமென்பது பாரிய அடக்குமுறைகளுக்குள்ளகி வருகிறது அப்படியான அடக்குமுறைகளை உலக கண்களுக்கு பகிரங்கப்படுத்துகின்ற மிக காத்திரமான பணிகளை ஆற்றிவருகின்ற பத்திரிகைகள் கூட அனேகமான நாடுகளில் அதிகாரவர்க்கத்தின் அடக்குமுறைக்குள் அகப்பட்டு தமது சுயாதீனத்தை வெளிப்படுத்த இயலாத நிலையினை கொண்டிருக்கின்றன.
அந்த வகையிலாக மறுக்கப்படும் பத்திரிகைகளுக்கான சயாதீனத்தை நிறுவ வேண்டும் என்பதற்காக வருடா வருடம் பத்திரிகை சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.
இன்று மே 03 ம் திகதி உலக பத்திரிகை சுதந்திர தினம் இன்றாகும். குறிப்பாக பத்திரிகை சுதந்திர நாள் என்பது பத்திரிகைகளின் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் நோக்கிலும் அதேநேரம் 'மனித உரிமைகள் சாசனம்த்தின் 19 வது பகுதி யின் படியான மனிதசமூகத்தின் பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் சபையினால் பத்திரிகை சுதந்திரத்திற்கான சிறப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.
இந்த பிடகடனத்தின் படி அதாவது கடந்த 1933 ம் வருமத்தின் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி ஒவ்வொரு ஆண்டும் மே 3 ஆம் திகதி உலகம் பத்திரிகை சுதந்திரதினமாக அனுஸ்டிக்கப்பட்டு வருகிறது குறிப்பாக ஊடகங்களைப்பொறுத்தவரை ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று வரைவிலக்கனப்படுத்தபடுவதுண்டு அதாவது நறைவேற்றுத்துறை, நீதித்துறை , சட்டவாக்கத்துறை ஆகிய மூன்று அமைப்புகளின் நடவடிக்கைகளை கண்காணித்து வெளிப்படைத்தன்மையுடன் கூடிய உண்மைகளை பிரஜைகளின் பார்வைக்கு பகிரங்கப்படுத்துகின்ற மிக முக்கிய வகிபாவத்தை ஜனநாயக அரசுகளின் நடைமுறைகளில் அமைந்து காணப்படுகிறது இவ்வாறான உயர் ஜனநாயகத்திற்கான ஒரு கருவியாக கருதப்படும் ஊடக்கத்தின் ஒரு பகுதியான பத்திரிகைகள் ஏனைய ஊடகங்களைப்போலவே நெருக்குவாரங்களுக்கு உட்பட்டுள்ளன அதேபோல அதன் ஊடகவியலாளர்கள் உலகின் பல்வேறு நாடுகளிலும் கடத்தப்படுவதும் படுகொலைசெய்யப்படுவதும் அச்சுறுத்தப்படுவதுமான நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்றேவருகிறது.
Freepik
இது ஜனநாயகத்தின் இருத்தலின் பெயரில் மிகப்பெரிய கேள்வியாக இருந்துவருகிறது என்பதும் மறுப்பதற்கில்லை மேற்சொன்ன அச்சுறுத்தல்களும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்படுதல் மற்றும் ஊடகப்படுகொலைகள் மலிந்துபோன ஒரு நாட்டில் வாழ்ந்த வாழுகின்றவர்கள் என்பதன்ற மூலமாக பத்திரிகை சுதந்திரம் என்பது ஶ்ரீலங்க போன்ற நாடுகளில் எந்த அளவுக்கு இருக்கிறது என்பது நம் அனைவருக்கும் நன்றாகவே தெரிந்த ஒரு விடயமாகும் இந்நிலையில் உலகத்தரவுகளின் படியாக பத்திரிகைச் சுதந்திரம் உள்ள உலக நாடுகளின் தரப்படுத்தலில் ஶ்ரீலங்காவுக்கான இடம் 131 ஆக பதிவாகியுள்ள அதே நேரம் ஊடக சுதந்திரம் உச்ச அளவில் உள்ள நாடாக நோர்வே பதிவாகியுள்ளது.
இந்த பட்டியலில் இஸ்ரேல் 88 ஆவது இடத்திலும் இந்தியா138 ஆவது இடத்திலும் காணப்படும் அதேவளை ஊடக சுதந்திரம் மறுக்கப்படுகின்ன நாடுகளின் பட்டியலில் உச்சமாக 180 ஆவது இடத்தை வட கொரியா பதிவுசெய்துள்ளது எது எவ்வாறாக இருந்தாலும் உண்மைகளை மக்களின் பார்வைக்கண்களுக்கு சேர்த்துவிடவேண்டும் என்பதற்காக உழைத்த ஊடகப்போராளிகள் அதிகமாக மௌனிக்கச்செய்யபட்ட ஶ்ரீலங்காவைப்பொறுத்தவரை சுமார் 40 ற்கும் மேற்பட்ட தமிழ் சிங்கள ஊடக கனவான்கள் கடத்தப்பட்டும் சுடப்பட்டும் உயிர்பறிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற துன்பியல் வரலாற்றை ஶ்ரீலங்காவின் ஊடகத்துறை இரத்தம் தோய்ந்த எழுத்துக்களால் எழுதி தனக்கான வரலாற்றை நிரப்பியிருக்கிறது.
குறிப்பாக மேலே குறிப்பிடப்பட்ட 131 வது இடம் என்பது கடந்த 2018 ம் ஆண்டுக்கான தரப்படுத்தலாக இருக்கின்ற அதே நேரம் இதற்கு முன்னதான காலப்பகுதியில் ஶ்ரீலங்காவின் நிலை 165 வது இடத்தில் இருந்திருந்தமையினையும் நாம் பதிவு செய்தாகவேண்டும் ஊடகங்களுக்கான சுயாதீனம் என்பது ஜனநாயக நடைமுறைகளில் மிக முக்கியமான அங்கமாகும் அது இல்லாதவிடத்து மக்களிக்கு முறையான தகவல்களை வழங்கமறுக்கன்ற மக்கள் பிரதிநிதிகளைக்கொண்ட அரசை மக்கள் ஏன் தெரிவு செய்ய வேண்டும் என்ற கேள்வியோடு நாம் இருக்கவேண்டிய ஒரு நிலையுண்டு குறிப்பாக ஜனநாயகத்திற்கான அளவுகோல்களில் ஊடகங்களின் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் மிகத்தெளிவான புள்ளிவிபரங்களை வழங்கும் என்றே சொல்ல வேண்டும்.
இலங்கையை பொறுத்தவரை ஊடகங்களின் மீதான தாக்குதல்களும் ஊடகவியாலளர்களின் மீதான படுகொலைகளும் மிக மிக மோசமானதென்பது மறுக்கமுடியாத ஒரு உண்மையாகும் பத்திரிகை நிறுவனங்கள் குண்டுவீசி தகர்க்கப்பட்ட ஒரு வரலாறும் கூட காணப்படுகின்றது அந்த வகையில் ஊடக சுதந்திரத்திற்காக ஊயிர் துறந்த ஒவ்வொருவரையும் நினைவேந்த வேண்டிய நாளாகவும் இன்றைய நாள் காணப்படுகிறது.
Social Nation
அதேநேரம் ஊடக சுதந்திரத்துக்காகப் பங்களிப்பு செய்யும் ஒருவருக்கு ஆண்டுதோறும் யுனெஸ்கோ நிறுவனத்தினர் யுனெஸ்கோஃகிலெர்மோ கானோ உலக பத்திரிகை சுதந்திர விருது வழங்கிக் கௌரவிக்கின்றனர். உலக அமைதிக்காகவும், பேச்சுச் சுதந்திரத்திற்காகவும் மற்றும் பத்திரிக்கை தர்மத்தினூடாகவும் பல இன்னல்களைத் தாண்டிப் போராடிய பத்திரிகை எழுத்தாளர் ஒருவருக்கு இந்நாளில் 25,000 டொலர் பெறுமதியான பரிசு வழங்கப்படுகின்றது.
சுமார் 14 நபர்களைக் கொண்ட குழுவால் குறிப்பிட்ட இத்தெரிவு நடைபெறுகிறது. இவ்விருது கொலம்பியப் பத்திரிகையாளர் கிலெர்மோ கானோ இசாசா என்பவரின் நினவாக ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இவர் 1986 ஆம் ஆண்டு டிசம்பர் 17 இல் அவரது அலுவலகம் முன்பாக வைத்துப் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
அவரின் கொலையின் பின்னரே பத்திரிகை சுதந்திரம் தொடர்பான பேச்சு வலுப்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இன்றைய நாளில் சுதந்திர ஊடகத்திற்காக உயிர்நீத்த அத்தனை ஊடக கனவான்களையும் நினைவேந்துவோம்