போர்க்களமாக மாறிய பாரிஸ் நகரம்: கூண்டோடு கைது செய்யப்பட்ட மக்கள்
பாரிஸில் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானை மீண்டும் தெரிவு செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆயிரக்கணக்கான மக்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் கலவரமாக வெடித்துள்ளது.
வன்முறையில் ஈடுபட்ட பொதுமக்களில் 45 பேர் கைது செய்யப்பட்டனர். பாரிஸ் நகரில் மே தினத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் திரண்டு பேரணியில் ஈடுபட்டனர்.
ஆனால் திடீரென்று ஆர்ப்பாட்டம் கலவராமாக மாறவே, பொலிசாருடன் மோதல் ஏற்பட்டுள்ளது. மட்டுமின்றி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ஜனாதிபதி மேக்ரானுக்கு அதிராக முழக்கங்கள் எழுப்பியுள்ளனர்.
ஞாயிறன்று பாரிஸ் நகரில் சுமார் 5,000 பொலிசார் கலவரத் தடுப்புக்கு என குவிக்கப்பட்டிருந்தனர். மட்டுமின்றி, பாரிஸ் தெருக்களில் தண்ணீர் பீரங்கி மற்றும் கவச கார்களும் நிறுத்தப்பட்டிருந்தன.
இதனிடையே, மே தின பேரணியில் ஈடுபட்ட மக்களில் சிலர் வங்கி ஒன்றின் ஜன்னல்களை உடைக்கவே, சிலர் துரித உணவகம் மீது தாக்குதலை முன்னெடுத்துள்ளனர். இச்சம்பவத்தின் மீது நடவடிக்கை முன்னெடுத்த பொலிசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர்.
இந்த நிலையில், உள்விவகார அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் தெரிவிக்கையில், கலவரத்தில் ஈடுபட்ட மக்களில் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் எட்டு பொலிசார் காயமடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பேரணியில் கலந்துகொண்டவர்கள் வீதியின் நடுவில் டயர்களை, குப்பைத் தொட்டிகளை தீயிட்டு எரித்து வன்முறையில் ஈடுபட்டனர். மே;லும், காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். டயர் ஒன்றை எரியூட்டி அதை காவல்துறையினர் நோக்கி வீசியுள்ளனர்.
மட்டுமின்றி, தீயை அணைக்க வந்த தீயணைப்பு படையினரையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாக்கியுள்ளனர். கலவரமானது திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்பட்டதாகவும், இலக்குகளை அவர்கள் முன்னரே தெரிவு செய்துள்ளதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுக்கு எதிரான ஆர்ப்பாட்டமாகவே இச்சம்பவத்தை கருத வேண்டும் எனவும், மே தின பேரணியை கும்பல் ஒன்று அதற்காக பயன்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இராண்டாவது முறையாக ஜனாதிபதி பொறுப்புக்கு தெரிவு செய்யப்பட்டாலும், ஜனாதிபதி மேக்ரான் இதுவரை அமைச்சரவை கூட்டத்தை முன்னெடுக்கவில்லை. மட்டுமின்றி, பதவியேற்பு விழா மே 13ம் திகதி நடத்தப்பட வாய்ப்பிருப்பதாகவே கூறப்படுகிறது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
திருமதி கெங்காரத்தினம் வல்லிபுரம்
வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், Singapore, London, United Kingdom
16 Apr, 2022
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022