2022 மே மாத ராசி பலன்கள் : அதிர்ஷ்டத்தை அள்ள போகும் ராசிக்காரர் யார் தெரியுமா?

Horoscope
By Kishanthini May 03, 2022 10:20 AM GMT
Report
Courtesy: dheivegam

2022 ஆம் ஆண்டின் 5 ஆவது மாதத்தில் நுழைந்துள்ளோம். இதன்படி 12 ராசிக்காரர்களுக்குமான பலன்கள் எப்படி இருக்கப்போகுது என பார்ப்போம்.

மேஷம்

மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் அற்புதமான மாதமாக அமைய இருக்கிறது. நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றி அடையும். திருமண சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சுப பலன்கள் உண்டு.

கணவன் மனைவிக்குள் இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் நினைத்தது நினைத்தபடி நடக்கும் யோகம் உண்டு.

புதிய முதலீடுகள் செய்து பொருளாதார ரீதியான உயரத்தை எட்டுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உங்களுடைய திறமையை மேலும் மெருகேற்றிக் கொள்ள கூடிய வாய்ப்புகள் அமையும். பெண்களுக்கு இறை வழிபாடுகளில் ஆர்வம் அதிகரித்து காணப்படும்.

ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் படிப்படியாக குறையத் துவங்கும். வெளியிட பயணங்களின் பொழுது எச்சரிக்கை உணர்வுடன் இருப்பது நல்லது.

பரிகாரத்திற்கு விநாயகருக்கு அருகம்புல் சாற்றி வழிபட்டு வாருங்கள் நல்லதே நடக்கும்.

ரிஷபம்

ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் எதிர்பாராத திடீர் திருப்பங்கள் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் உள்ளவர்களுக்கு தேவையற்ற அலைச்சல் ஏற்படலாம் என்பதால் திட்டமிட்டு செயல்படுவது நல்லது.

தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நடக்கக் கூடிய நன்மைகள் யாவையும் சிறப்புற நடக்கும். பொருளாதாரத்தில் இருந்து வந்த ஏற்ற, இறக்கங்கள் சீராகும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் அனுகூல பலன் உண்டு.

உத்தியோகஸ்தர்களுக்கு எதிலும் எச்சரிக்கை உணர்வு தேவை, தேவையற்ற வீண் பழிகள் ஏற்படலாம். பெண்களுக்கு புது உத்வேகம் காணப்படும். பொன், பொருள் சேரும் யோகம் உண்டு. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

பரிகாரத்திற்கு செவ்வாய்க்கிழமை தோறும் துர்க்கை அம்மனை வழிபட்டு வாருங்கள் தடைகள் விலகும்.

மிதுனம்

மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகளுக்கு சுப பலன்கள் உண்டாகும் நல்ல மாதமாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத இடங்களிலிருந்து பணவரத்து இருக்கும். இதுவரை வராத பாக்கிகள் வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு அதிக பொறுமை தேவை. உங்களை சுற்றி இருப்பவர்கள் உங்களை சீண்டிப் பார்க்க முயற்சி செய்வார்கள். சமயோஜித புத்தியுடன் இருப்பது நல்லது. பெண்களுக்கு எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் பிறக்கும். கணவன்-மனைவிக்குள் சிறு சிறு வாக்கு வாதங்கள் ஏற்பட்டு மறையும். பூர்வீக சொத்து பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வம்பு, வழக்குகளில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. ஆரோக்கியத்தை கவனிப்பது நல்லது. பரிகாரத்திற்கு பஞ்சமுக ஆஞ்சநேயரை வழிபடுங்கள் தைரியம் பிறக்கும்.

கடகம்

கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் நீங்கள் உங்களுடைய கடமையில் கூடுதல் அக்கறையுடனும் இருப்பது நல்லது. உங்களுடைய அலட்சியம் ஆபத்தை கொடுக்கும் அமைப்பாக இருப்பதால் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வது நல்லது.

தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய யுக்திகளை கையாளுவீர்கள். பெரிய தொகையை முதலீடு செய்யும் வாய்ப்புகள் அமையும்.

உத்தியோகஸ்தர்களுக்கு சக போட்டியாளர்களின் எண்ணிக்கை மேலும் வலுவாகும் என்பதால் கூடுதல் உழைப்பு தேவைப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும். கணவன் மனைவிக்குள் இருக்கும் அன்பு அதிகரிக்கத் துவங்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் மெல்ல மெல்ல மறையும்.

பரிகாரத்திற்கு முருகனுக்கு பால் அபிஷேகம் செய்யுங்கள்.

சிம்மம்

சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் ஏற்றம் தரக்கூடிய அமைப்பாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு லாபகரமான மாதமாக அமையும். குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த குழப்பங்களுக்கு முடிவு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வருமானம் அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் உண்டு.

பதவி உயர்வு, இட மாற்றம் குறித்த விஷயங்களில் அனுகூல பலன்களை பெற இருக்கிறீர்கள். கணவன் மனைவிக்கு இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் பற்றிய கவலை மேலோங்கி காணப்படும். பொருளாதாரத்தில் ஏற்றம் அதிகரிக்கும். ஆரோக்கியம் குறித்த விஷயத்தில் கூடுதல் அக்கறை கொள்வது நல்லது.

பரிகாரத்திற்கு நவக்கிரகங்களை வழிபட்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

கன்னி

கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் சுப பலன்களைக் கொடுக்கக் கூடிய நல்ல மாதமாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற பிடிவாதம், தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது.

கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் மேலும் வலுவடைய வாய்ப்புகள் இருப்பதால் பேச்சில் கவனம் தேவை

. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. புதிய பொருட் சேர்க்கை ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. ஆரோக்கியத்தில் இதுவரை இருந்து வந்த குறைகள் மறைய தொடங்கும்.

பரிகாரமாக தடைகள் அகல திங்கட்கிழமையில் சோமவார விரதம் இருப்பது நல்லது.

துலாம்

துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் இனிய மாதமாக அமைய இருக்கிறது. எதையும் சமாளிக்க கூடிய வல்லமை பிறக்கும். உங்களுக்கு எதிராக பலரும் செயல்பட வாய்ப்புகள் உண்டு எனினும் உங்களுடைய துணிச்சலான முடிவுகள் மற்றவர்களை ஆச்சரியப்படுத்தும். குடும்பத்தில் இருந்து வந்த தேவையற்ற பிரச்சினைகளை பேசித் தீர்த்துக் கொள்வீர்கள்.

விட்டு சென்ற உறவுகள் மீண்டும் வந்து இணைய வாய்ப்புகள் உண்டு.

கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் சிக்கனமாக இருப்பது நல்லது. பிள்ளைகளின் எதிர்காலத்தில் கவனம் கொள்ளுங்கள். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

பரிகாரமாக அம்பாளுக்கு வெள்ளிக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

விருச்சிகம்

விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் சிறப்பானதாக அமைய இருக்கிறது. உங்கள் குடும்பத்தில் இருக்கும் மூத்தவர்களை அனுசரித்து செல்லுங்கள். தேவையற்ற வம்பு, வழக்குகளில் மாட்டிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. வழக்கு சார்ந்த விஷயங்களில் ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை மேலும் அதிகரிக்கும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கிடைக்கும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.

உத்தியோகஸ்தர்களுக்கு சக போட்டியாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றாலும் உங்களுடைய திறமையை நிரூபிக்க கூடிய நல்ல வாய்ப்புகளும் கிடைக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.

பரிகாரமாக பசுவிற்கு அகத்திக்கீரை கொடுத்து வாருங்கள்.

தனுசு

தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் ஏற்றம் தரக்கூடிய அமைப்பாக இருப்பதால் நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். சுபகாரியத் தடைகள் விலகி மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகளை பெறுவீர்கள்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கம் காணப்படும் என்பதால் தேவை அறிந்து செலவு செய்வது நல்லது. மறைமுக போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் கூடுதல் உழைப்பை கொடுக்க வேண்டியிருக்கும்.

உத்யோகஸ்தர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். வரவுக்குள் செலவை கட்டுப்படுத்துவது நல்லது. ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும்.

பரிகாரமாக சனிக்கிழமையில் துளசி மாலை சாற்றி பெருமாளை வழிபட்டால் நல்லது நடக்கும்.

மகரம்

மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் எடுக்கக் கூடிய முடிவுகளுக்கு நீங்களே பொறுப்பேற்க வேண்டியிருக்கும். எதையும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது.

பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை சமாளித்து விடுவீர்கள். குடும்ப விஷயங்களை வெளியில் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற அலைச்சல் ஏற்படலாம் என்பதால் அனாவசியப் பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம்.

உத்தியோகஸ்தர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். உங்களுடைய திறமைகளை பல விமர்சனங்களையும் தாண்டி வெளி உலகிற்குக் கொண்டு வரக்கூடிய நல்ல மாதமாக இருக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.

பரிகாரமாக பைரவர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

கும்பம்

கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் அனுகூலம் தரும் நல்ல மாதமாக இருக்கிறது. சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும்.

ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். பெரியோர்களுடைய பேச்சைக் கேட்டு முடிவெடுப்பது நல்லது. பிரீ மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய நண்பர்கள் அறிமுகம் கிடைக்கும். வேலையில்லாத பட்டதாரிகளுக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும்.

உத்தியோகஸ்தர்களுக்கு எடுக்கும் காரியத்தில் இழுபறி ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்பதால் குறித்த நேரத்திற்குள் பொறுப்புடன் வேலை செய்வது நல்லது. பெண்களுக்கு மன உளைச்சல் நீங்கும். ஆரோக்கியத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

பரிகாரமாக தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்யுங்கள் அதிர்ஷ்டம் வரும்.

மீனம்

மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் இனிய மாதமாக அமைய இருக்கிறது. நீங்கள் நினைத்ததை நினைத்தபடி சாதித்துக் காட்டுவீர்கள். எவ்வளவு தடைகள் வந்தாலும் அதை எதிர்த்துப் போராடுவீர்கள். குடும்பத்தில் சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நடக்கும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் தேவையற்ற கடன்களை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் நடக்கலாம்.

உத்தியோகஸ்தர்களுக்கு நேர்மறையான அணுகுமுறை தேவை. குறுக்கு வழியில் சிந்தித்தால் வம்பு வழக்குகளில் மாட்டிக் கொள்ள வாய்ப்புகள் உண்டு.

பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணலாம்.

பரிகாரமாக ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமையில் வெற்றிலை மாலை சாற்றி வழிபடுங்கள் நல்லது நடக்கும்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சாவகச்சேரி, வவுனியா, சென்னை, India

29 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி பத்தமேனி, Bobigny, France

27 Dec, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Scarborough, Canada

25 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, கனடா, Canada

29 Dec, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, London, United Kingdom

29 Dec, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், மாவிட்டபுரம், கிளிநொச்சி, Toronto, Canada

26 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Basel, Switzerland

30 Dec, 2024
நன்றி நவிலல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிக்குளம், பிரான்ஸ், France

29 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Ivry-sur-Seine, France

12 Jan, 2022
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

25 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், Herning, Denmark, London, United Kingdom

28 Dec, 2025
மரண அறிவித்தல்

சிங்கப்பூர், Singapore, Sangarathai, மானிப்பாய், நெதர்லாந்து, Netherlands, ஜேர்மனி, Germany

23 Dec, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி கிழக்கு, East Gwillimbury, Canada

27 Dec, 2025
மரண அறிவித்தல்

வேப்பங்குளம், கோவில் புதுக்குளம்

27 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வெள்ளவத்தை, Freiburg, Germany

23 Dec, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உமையாள்புரம்

26 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

29 Dec, 2015
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, Scarborough, Canada, Markham, Canada

09 Jan, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Ottawa, Canada, Markham, Canada

27 Dec, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், அவுஸ்திரேலியா, Australia

29 Dec, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, தமிழீழம், வைரவபுளியங்குளம், தமிழீழம்

22 Dec, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, India, Toronto, Canada

25 Dec, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, Toronto, Canada

26 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, கொழும்பு

29 Dec, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு 14

29 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், சுவிஸ், Switzerland, London, United Kingdom

11 Jan, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, இணுவில் தெற்கு

31 Dec, 2022
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada, Ottawa, Canada

23 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Mississauga, Canada

31 Dec, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம்

30 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada

08 Jan, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வாதரவத்தை, விசுவமடு, Toronto, Canada

22 Dec, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Zürich, Switzerland

21 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US