2022 ஐபிஎல்! ரசிக பலம் கொண்ட பிரபல அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
2022 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மயங்க் அகர்வால் கேப்டனாக நியமிக்கப்பட உள்ளார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் பஞ்சாப் அணிக்கு கடந்த சீசன்களில் லோகேஷ் ராகுல் கேப்டனாக செயல்பட்டார்.
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியில் புதிய வரவாக வந்துள்ள லக்னோ அணிக்கு லோகேஷ் ராகுல் சென்று விட்டார். அவர் அந்த அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு யாரை நியமிப்பது தொடர்பாக அணி நிர்வாகம் ஆலோசித்து வந்தது.
இதில் அந்த அணியின் தொடக்க வீரரான மயங்க் அகர்வால் கேப்டனாக நியமிக்கப்பட உள்ளார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
பஞ்சாப் அணி நிர்வாகம் மயங்க் அகர்வாலை தக்க வைத்து கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது