அங்கு தான் நாங்கள் தோற்றோம்: பஞ்சாப் கேப்டன் மயங்க்
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் முதல் 10 ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்ததால் தோல்வியுற்றதாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் தெரிவித்துள்ளார்.
மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் லீக் போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் டெல்லி கேப்பிடல்ஸ் 4வது இடத்திற்கு முன்னேறியது.
போட்டிக்கு பின்னர் பேசிய பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் கூறும்போது, 'இன்று (நேற்று) நாங்கள் சிறப்பாக துடுப்பாட்டம் செய்யவில்லை, எங்கள் அணி 5 முதல் 10 ஓவர்களில் நிறைய விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அங்கு தான் நாங்கள் தோற்றோம்.
இந்த விக்கெட் அவ்வளவு மோசமாக இல்லை, நங்கள் இலக்கை விரட்டியிருக்க வேண்டும். எங்களுக்கு இன்னும் ஒரு போட்டி மீதமுள்ளது. எங்களது யுக்தியை மறுபரிசீலனை செய்வதன் மூலம், அடுத்த போட்டியில் வெற்றி பெற்று இரண்டு புள்ளிகளை பெறுவோம்' என தெரிவித்துள்ளார்.