தமிழக பெண் எம்.பியிடம் நகை பறிப்பு - இந்திய தலைநகரில் நடந்த அதிர்ச்சி
சம்பவம் மயிலாடுதுறை எம்.பியிடம் டெல்லியில் நகை பறிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக எம்.பியிடம் நகை பறிப்பு
தமிழகத்தின் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியின் எம்.பி ஆக இருப்பவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுதா.
இன்று காலை டெல்லியின் சாணக்யாபுரி பகுதியில் எம்.பி சுதா நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார்.
அப்போது ஹெல்மெட் அணிந்து ஸ்கூட்டியில் வந்த மர்ம நபர் எம்.பி சுதாவின் 4.5 சவரன் தங்கச் சங்கிலியை பறித்து சென்றுள்ளார்.
இந்த சம்பவத்தில், சுதாவின் கழுத்து பகுதியில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக சாணக்கியபுரி காவல் நிலையத்தில் எம்.பி. சுதா புகாரளித்துள்ளார். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து நகை பறிப்பில் ஈடுபட்டவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
தூதரங்கள், மாநில அரசின் இல்லங்கள் அமைந்துள்ள உயர் பாதுகாப்பு மண்டலத்தில், நாடாளுமன்ற உறுப்பினரிடம் நகை பறிப்பு சம்பவம் நடைபெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |