ஜேர்மன் தலைநகர் பெர்லினில் இருளில் மூழ்கிய 45,000 வீடுகள்: மேயர் குற்றச்சாட்டு
ஜேர்மன் தலைநகர் பெர்லினில், 45,000 வீடுகள் இருளில் மூழ்கிய விடயம் தொடர்பில், இடதுசாரி அமைப்புகள் மீது குற்றம் சாட்டியுள்ளார் நகர மேயர்.
இருளில் மூழ்கிய 45,000 வீடுகள்
சனிக்கிழமை இரவு, Lichterfelde என்னுமிடத்தில் அமைந்துள்ள மின் நிலையம் ஒன்றில் தீப்பற்றியது.
அதன் காரணமாக, தென்மேற்கு பெர்லினிலுள்ள 45,000 வீடுகளிலும், 2,200 அலுவலகங்களிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் சீராக இன்னும் சில நாட்களாகலாம் என கருதப்படுகிறது.
இந்நிலையில், பெர்லின் நகர மேயரான Kai Wegner, இந்த சம்பவத்துக்கு தாங்கள்தான் பொறுப்பு என ஒரு அமைப்பினர் தனக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அந்த கடிதத்தின் நம்பகத்தன்மை குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருவதாகத் தெரிவித்துள்ள அவர், சம்பந்தப்பட்டவர்கள் இடதுசாரி தீவிரவாத அமைப்பினர் என்பது மட்டும் தெளிவாகியுள்ளது என்று கூறியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின் விநியோகம் சீராகிவிட்டது என்றாலும், நிலைமை முற்றிலும் சீராக வியாழக்கிழமை வரை ஆகலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |