பல நூறு பேர்களின் உயிரைப் பறித்த சம்பவம்... பிரான்சில் இருந்து வெளிவரும் பகீர் தகவல்
இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள பிரெஞ்சு தீவுக்கூட்டமான மயோட்டியில் சிடோ சூறாவளியால் பல நூறு பேர், ஒருவேளை ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பல ஆயிரம் மக்களை நாம் இழக்கலாம்
உள்ளூர் செய்தி ஊடகமான Mayotte La 1ere மூலம் உள்ளூர் பிரெஞ்சு அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை குறித்த தகவல் வெளியிட்டுள்ளார். நிச்சயமாக பல நூற்றுக்கணக்கானவர்கள் இறந்திருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்,
ஒருவேளை ஆயிரம், பல ஆயிரம் மக்களை நாம் இழக்கலாம் என்று உள்ளூர் அரசியற் தலைவர் ஃபிராங்கோயிஸ்-சேவியர் பியூவில் தெரிவித்துள்ளார். இதனிடையே, நூற்றுக்கணக்கானவர்களின் இறப்பு தொடர்பில் விசாரிக்கப்பட்டதை அடுத்து பிரெஞ்சு உள்விவகார அமைச்சகம் தெரிவிக்கையில்,
பாதிக்கப்பட்டவர்கள் அனைவரின் எண்ணிக்கையை தற்போது வெளியிடுவது என்பது சிக்கலான விடயம், இந்த நெருக்கடியான கட்டத்தில் ஒரு எண்ணிக்கையை தீர்மானிக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளது.
சிடோ சூறாவளியானது இரவோடு இரவாக மயோட்டியை மொத்தமாக புரட்டிப் போட்டுள்ளது. மணிக்கு 200 கிமீ வேகத்தில் காற்று வீசியதுடன் தற்காலிக வீடுகள், அரசு கட்டிடங்கள் மற்றும் மருத்துவமனையை மொத்தமாக சேதப்படுத்தியுள்ளது.
கடந்த 90 ஆண்டுகளில் Mayotte தீவுகளைத் தாக்கும் வலிமையான புயல் இது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சூறாவளிக்குப் பிறகு துல்லியமான இறப்பு எண்ணிக்கையைக் கண்டறிவது என்பது கடினம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
4 நாட்கள் பயணம்
இந்த நிலையில் சூறாவளி தாக்கிய பகுதியில் உணவு, தண்ணீர் மற்றும் சுகாதாரம் பற்றிய கவலைகள் எழுந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே பிரான்ஸ் உள்விவகார அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்,
இறப்பு எண்ணிக்கையைப் பொறுத்தவரை, சிக்கலான விடயம் எனவும், இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் பகுதி மாயோட் என்பதால், அங்கு இறந்தவர்கள் 24 மணி நேரத்திற்குள் புதைக்கப்படுகிறார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பாரிஸ் நகரில் இருந்து 5,000 மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது Mayotte தீவுக்கூட்டம். கடல் மார்க்கம் 4 நாட்கள் பயணம் செய்ய வேண்டும். பிரான்சின் மற்ற பகுதிகளை விட மிகவும் ஏழ்மையான பகுதியாகும் மயோட்.
மட்டுமின்றி பல தசாப்தங்களாக குழுக்களால் வன்முறை மற்றும் சமூக அமைதியின்மை ஆகியவற்றுடன் போராடி வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் அங்கு பதற்றம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |