நோ பால்! இது இன்னும் முடியல..உணர்ச்சிவசத்தில் நின்று பேசிய வர்ணனையாளரின் வீடியோ
Pommie Mbangwa ஜிம்பாப்வே அணியின் முன்னாள் வீரர் ஆவார்
பிரீ ஹிட் பந்தை அடிக்காமல் தவற விட்டதால் ஜிம்பாப்வே அணி தோல்வியை தழுவியது
ஜிம்பாப்வே - வங்கதேச அணிகளுக்கு இடையிலான போட்டியின் கடைசி ஓவர் நோ பால் தற்போது இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது.
பிரிஸ்பேனில் நடந்த உலகக்கோப்பை டி20 போட்டியில் வங்கதேச அணி 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் கடைசி பந்து நோ பால் என அறிவிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜிம்பாப்வே அணியின் வெற்றிக்கு ஒரு பந்தில் 5 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், கடைசி பந்தில் முஷரபானி ஆட்டமிழந்தார். இதனால் இரு அணி வீரர்களும் போட்டி முடிந்துவிட்டது என்று திரும்பினர்.
அப்போது எதிர்பாராத விதமாக கடைசி பந்து நோ பால் என்று அறிவிக்கப்பட்டது. விக்கெட் கீப்பர் ஸ்டம்புக்கு முன் வந்த பந்தை பிடித்ததால் நோ பால் என்று நடுவர் கூறினார். வர்ணனையாளர் Pommie Mbangwa உணர்ச்சிவசப்பட்டு எழுந்து நின்று வர்ணனை செய்தார்.
Here he goes again - watch the players ?? #drama #T20WorldCup #BANvZIM pic.twitter.com/6adjF9QVLE
— Isa Guha (@isaguha) October 30, 2022
அவர், ஓ..இது நோ பால்! போட்டி இன்னும் முடியவில்லை. ஜிம்பாப்வேயின் வெற்றிக்கு இன்னும் 4 ஓட்டங்கள் தான் தேவை என்று கூறினார். இதுதொடர்பான வீடியோவை இங்கிலாந்து வர்ணனையாளர் இஷா தாரா குகா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
IT IS NOT OVER!
— ICC (@ICC) October 30, 2022
Zimbabwe require 4 runs off the final ball.#T20WorldCup | #BANvZIM | ?https://t.co/Qi8dhfgeEW pic.twitter.com/ROp5JmLS9T